தற்கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தற்கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

தற்கொலையை சட்ட விரோதம் என கருதுவதை தடுக்கும் புதிய மன நல மசோதா

தற்கொலையை சட்ட விரோதம் என கருதுவதை தடுக்கும் புதிய மன நல மசோதா இந்த வாரத்தில் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதா மூலம் மன நல கவனிப்பை அனைவருக் கும் தரும் உரிமையை அளிக் கும்.முதன் முறையாக நாட் டில் கிரிமினல் சட்டம் சீர மைப்பு தற்போது அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

தற்போது அறிமுகமாகி யுள்ள மனநல கவனிப்பு மசோதா 2013 தற்கொலை யை சட்டவிரோதம் என கூறும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தற்கொலை க்கான முயற்சிப்போரின் மனநலம் கருத்தில் கொள் ளப்படும்.இந்த மசோதா நிலைப் படி தற்கொலை என்பது கிரிமினல் செயல்பாடு அல்ல. தற்கொலை முயற்சி யை மேற்கொள்பவர்களு க்கு மன நல சிகிச்சை அளிக் கப்படும். தற்கொலை சட்ட விரோதமானது என கூறும் இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 309 ல் தற்போதைய மசோதா விலக்குஅளிக்கும்.தற்போதைய மசோதா படி தற்கொலை

முயற்சியும் மனநல ஆரோக்கியமும் ஒன்றிணைத்து பார்க்கும் நிலை யை அளிக்கும்.இந்த மசோதாவை சுகா தாரத்துறை அமைச்சகம் கொண்டு வந்தது.

தற்கொலை முயற்சி மேற்கொள் பவர்களின் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் இந்த மசோதாவில் வழி வகுக் கப்பட்டுள்ளது.முதன் முறையாக அரசு மன நல சட்டத்தில் உரிமை சார்ந்த அணுகு முறையை மேற்கொண்டுள்ளது. கடந்த 2008ம்ஆண்டு மே மாதம் 3ம் தேயின்று குறைபாடு நபர்கள் உரிமை யை மனநல சட்டத்தில் ஒன்றிணைக்க ஐ.நா. கூடுகை யில் இந்தியா கையெழுத் திட்டது அதனைத்தொடர் ந்து தற்போது இந்த மசோ தா கொண்டுவரப்பட்டுள் ளது.

புதிய மசோதாப்படி , மனநல நேயாளிகளுக்கு மின்சார சிகிச்சைஅளிப் பது, சங்கிலியால் பிணைத் தல் மற்றும் தலையை மொ ட்டை அடித்தல் போன்ற மனிதாபிமானமற்ற நட வடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.மேலும் அங்கீகாரமற்ற மன நல மையம் நடத்துபவர் களுக்கு ரூ 50ஆயிரம் அபரா தம் விதிக்கப்படுகிறது.

The new mental health care bill, which seeks to decriminalise suicide and make access to affordable mental health care a right for all, was introduced in Rajya Sabha this week.
For the first time in the history of criminal law reform in the country, Mental Health Care Bill, 2013 seeks to decriminalise acts of suicide by linking them to the state of mental health of the person attempting the act.
The Bill explicitly states that acts of suicide will not be criminalised and those attempting suicide would be treated as mentally ill unless proved otherwise and therefore exempted from the current provisions of Section 309 of Indian Penal Code.
Section 124 of the Bill states, “Notwithstanding anything contained in Section 309 of the IPC, any person who attempts suicide shall be presumed, unless proved otherwise, to be suffering from mental illness at the time of the bid and shall not be liable to punishment under the said section.”
The Bill thus clarifies that the act of suicide and the mental health of the person committing the act are inseparably linked and have to be seen together and not in isolation.
Moved by the Ministry of Health, the Bill lays down a proper provision for the treatment of persons attempting suicide.
It seeks to provide for mental health care for persons with mental illnesses and to protect, promote and fulfil the rights of such persons during the delivery of mental health care and services.
It is the first time that the Government has come up with a rights based approach in the mental health law.
The Law Commission will separately move this amendment to the Criminal Law which would eventually be effected by the Home Ministry.
However, Health Ministry sources said the Law Ministry agreed on the proposed section in the new Mental Health Care Bill to decriminalise suicide.
“It is a landmark Bill which takes care of the rights of the mentally ill. It is forward looking and India needed such a law. It strongly protects the rights of mentally ill and puts a lot of onus for the welfare of the ill on the Government,” a Health Ministry official said.
The Bill fills the long standing gap in the mental health law in India after the country ratified the UN Convention on the Rights of Persons with Disabilities requiring it to harmonise its laws with those prevalent worldwide. India had signed the convention on October 1, 2007 and it came into force on May 3, 2008.
Once the Parliament passes the Bill and it is assented by the President, it will replace the Mental Health Act of 1987.
The new Bill guarantees several rights to the mentally ill - from the right to privacy in mental health establishments to the right to dignity. It bars inhuman practices such as electro convulsive therapy without anaesthesia, sterilisation as a treatment for illness, chaining and tonsuring of heads of the mentally ill.
The Bill also provides stringent penalties for those found running unregistered mental health care establishments which would be fined with Rs. 50,000 to Rs. five lakh depending on the frequency of the offence.
It seeks to regulate the public and private mental health sectors and establish a mental health system integrated into all levels of general health care.
The law also provides for the Advance Directive to be furnished in writing by a person, irrespective of his mental illness, and registered with a Mental Board to be set up by the government at state and central levels. This directive allows the individual to appoint a nominated representative to deal with the kind of treatment he wants in the case he falls mentally ill in future.
The Bill provides for a State Mental Health Authority and a Central Mental Health Authority along with a Mental Health Review Commission to regulate the sector and register institutions.

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள் எதையும் எதிர்கொள்ளும் உளத்திண்மை ஊட்டப்பட வேண்டாமா?

தைரியலட்சுமி என்ற பெயரைத் தன் மூத்த மகளுக்கு வைக்கும்போது அந்த ஏழை விவசாயி சக்திவேலுவும், அவரது மனைவியும் என்னவெல்லாம் கோட்டை கட்டி இருந்திருப்பார்களோ தெரியாது. பிளஸ் 2 வில் 92 சதவீத மதிப்பெண்கள் பெற்ற செல்ல மகளை மிகுந்த நம்பிக்கையோடு கடனை உடனை வாங்கி பொறியியலாளராக ஆக்க வேண்டும் என்று அண்ணா பல்கலை.யில் சேர்த்திருந்தனர். ஓராண்டு கூட நிறைவடையுமுன் அவளை இப்படி பறிகொடுப்போம், உயிரற்ற அவளுடலைச் சொந்த மண்ணுக்குச் சுமந்து செல்வோம் என்று அந்த அப்பாவி மனிதர் நினைத்திருப்பாரா, பாவம். துணிவாக வாழ்வில் எதையும் எதிர்த்து நின்று போராடி முன்னேறுவாள் என்ற கற்பனையில் மண் விழுந்து, இப்படி ஒரு முடிவெடுக்க எப்படித்தான் துணிந்தாளோ என்று பெற்றோரைப் புலம்ப வைத்துச் சென்றுவிட்டார் மகள்.

ஏப்ரல் 17 அன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்ற தைரியலட்சுமி முதலாவது வகுப்பு முடிந்தவுடன் விடுதி அறைக்குத் திரும்பிவிட்டார். கடந்த சில நாட்களாகவே அவருக்குள் அலைமோதிக்கொண்டிருந்த தாழ்வுணர்ச்சி, அச்சம், ‘இனி மீள முடியாது’ என்று இறுகிப் போன மனம் அவரது தன்னம்பிக்கையை அடித்து வீழ்த்திய மோசமான ஒரு கணத்தில் தனது வாழ்வை முடித்துக் கொண்டுவிட்டார். தமிழ்வழிக் கல்வி படித்துவிட்டுக் கல்லூரியில் கால் பதித்தவர், ஆங்கில மொழிவழியில் பொறியியல் கற்க இயலாதென தோற்றுப் போன உணர்வின் உந்துதலில் இந்த முடிவைத் தேர்ந்தெடுத்துவிட்டார். அதே கல்லூரியில் மூன்றாமாண்டு மாணவர் மணிவண்ணன் சில நாட்களுக்குமுன் மேற்கொண்ட தவறான வழியையே லட்சுமியும் பின்பற்றிச் சென்றுவிட்டார். மணிவண்ணன் தனது நொறுங்கிய உள்ளத்தின் ஒரு துகளைக் கூட வெளிக்காட்டாதபடி இருந்தவர். அந்த இறுதி நாளின் மாலையில் கூட, விரைவில் தமது கவிதைத் தொகுப்பை வெளியிடப் போவதாக உற்சாகமாக நண்பர்களிடம் சொல்லிவிட்டுத்தான் தமது முடிவை நோக்கி காலடி எடுத்து வைத்திருந்தார். துணைவேந்தரிடமும், ஆசிரியர்கள், சக மாணவர்களுடனும் நெருங்கிய தோழமை கொண்டிருந்த மணிவண்ணன் காதல் தோல்வியினால் தான் இப்படியான முடிவைத் தேடிக் கொண்டார் என்றனர். குழந்தைத் தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்டு பிளஸ் 2 தேர்வில் 97 சதவீதம் மதிப்பெண் பெற்று, மாநில அளவில் 13 வது இடம் பெற்றிருந்தும்,ஆங்கில வழிக் கல்விக்கு மாறிய உயர்கல்வியில் சிரமங்களை எதிர்கொண்டிருந்தார் என்பதும் சொல்லப்படுகிறது.முழுவிவரங்கள் தெரியவில்லை. சென்னையில் இந்த ஆண்டில் இதுவரை மாணவர் தற்கொலை எண்ணிக்கை 19 என்கிறது காவல்துறை.

இதில் 11 பேர் கல்லூரி மாணவர்கள். எட்டு பேர் பள்ளி மாணவர்கள். பத்தொன்பது பேரில் 12 பேர் பாடச் சுமையின் கனம் தாளாமல் முறிந்தவர்கள்.ஐ ஐ டி சென்னையில் தொடரும் தற்கொலைகள் பெரிய விவாதத்தைத் தூண்டியுள்ளன.ஜனவரி மாதம், தேர்வுகளில் தோல்வியைச் சந்தித்த அதிர்ச்சியில் பி.டெக் மூன்றாமாண்டு மாணவி அஸ்வினி வாழ்வை முடித்துக் கொண்டதுதான் ஆண்டின் முதல் தற்கொலை. பிளஸ் 2 மாணவி இந்துஜா, கல்லூரி மாணவி நந்தினி இருவரும் தங்களது படிப்புத் தரம் குறித்துப் பெற்றோர் கடிந்து கொண்டதைத் தாங்கமாட்டாமல் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள். பள்ளி மாணவர் மாறன், புவனேஸ்வரி, கலையரசி ஆகியோரும் கூட நன்றாகப் படிக்கவில்லை என்று தாய்- தந்தையர் கோபித்துக் கொண்டதையும், அறிவுறுத்தியதையும் அடுத்து மோசமான முடிவை தேடிக் கொண்டவர்கள். இந்தக் கட்டுரை எழுதும் நேரத்தில் தற்கொலைகளின் எண்ணிக்கை இருபத்தி இரண்டாக உயர்ந்துவிட்டது. கவிதா என்கிற ஒன்பதாம் வகுப்பு மாணவி தேர்வு நேரத்தில் வகுப்புத் தோழி ஒருவருக்கு விடைத்தாளைக் கொடுத்தபோது பிடிபட்டிருக்கிறார். மறுநாள் தந்தையுடன் வருமாறு சொல்லியிருக்கின்றனர். தந்தையோடு சென்றவரைத் தலைமை ஆசிரியை அழைத்துக் கொஞ்சம் கடிந்துகொண்டதோடு அறிவுறுத்தியும் அனுப்பி இருக்கிறார். வீடு திரும்பியவுடன் தந்தை மதிய உணவு வாங்க ஓட்டலுக்குப் போன நேரத்தில் கவிதா தன்னைத் தானே எரித்துக் கொண்டுவிட்டார். மிக அண்மையில் மதுரவாயல் சங்கீதா, அயனாவரம் வினோதினி இருவரும் தேர்வை சரியாக எழுதாத அச்சத்தில் இதே போன்றதொரு தவறான முடிவை எடுத்துப் பெற்றோரைப் பரிதவிக்க விட்டுச் சென்றுவிட்டனர்.

இந்த அகால மரணங்கள் ஒவ்வொன்றும் மனித நேயமிக்க அன்பு இதயங்களைக் கிழித்துப் போடுபவை. நான்கு மாதங்களுக்குள் இருபத்திரெண்டு தற்கொலைகள் என்பது சராசரியாக வாரத்திற்கு ஒன்று என்றாகிறது.இன்றைய கல்விச் சூழல் பற்றித் தொடர்ந்து கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் எழுதிக் கொண்டு தான் இருக்கின்றனர். எரிமலையின் விளிம்பில் இருக்கிறது நிலைமை என்று கூட எச்சரித்து வருகின்றனர். மதிப்பெண்களைச் சுற்றியே ஓயாமல் மாணவர்கள் விரட்டப்படுகின்றனர் என்பது அடிப்படை உண்மை. படி, படி, படி என்ற சொற்கள் மிகப்பெரும் வன்முறை ஆயுதமாகவே மாறி இருக்கிறது. அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கூட பிறகு உளவியல் மருத்துவர்களிடம் சென்று உதவி தேடுவது விரிவாகப் பேச வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம்.அறிவுப் பெருக்கம், உலக ஞானம், இன்ப வெளிக்குள் உலா, புதுமை தேடல், துருவி ஆராய்தல், குடைந்து நீராடுதல் என்பதாக அமைய வேண்டிய கல்வியின் பயணம் உண்மையில் எப்படி இருக்கிறது? வேதாளம் சேர்ந்து, வெள்ளெருக்குப் பூத்து, பாதாள மூலி படர்ந்த மோசமான இடத்தில் வாழ்க்கைப்பட்ட கதையாக கசப்பிலும், வெறுப்பிலும், அச்சத்திலும், அவநம்பிக்கையிலும் கழிகிறது. எதையும் சந்திக்கும் உரம் போட்டு வளர்க்காத குழந்தைப் பருவமாக சமூகம் அடுத்தடுத்த தலைமுறைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறது. வெற்றியின் கனி மட்டிலுமே ருசிக்க வேண்டும் என்ற போதனை சிறு சறுக்கலுக்குக் கூட தாக்குப் பிடிக்காதவர்களாக மாணவப் பருவத்தை உருக்குலைத்துக் கொண்டிருக்கிறது. ‘எதிர்த்துப் பேசாதே, சொன்னதைச் செய், பேச்சைக் குறை, போய் உட்கார்ந்து படி, உருப்படும் வழியைப் பார்’ என்ற ஒற்றை வழி உரையாடலே வீடுகளில் மிகுந்திருக்கிறது.

குரல்களை ஒலிக்காமல் செய்துவிடுவது உள்ளுணர்வுகளின் இழைகளை எப்படி கிழித்துச் சின்னாபின்னமாக்கும் என்பதை உணர்வதில்லை நாம். எல்லாம் மோசம் போன பின் கதறிக் கதறித் துடிக்கும் சமூகம் தன்னம்பிக்கையும், துணிவும், வீழ்ச்சியிலிருந்து மீண்டு வரும் உளத் திண்மையும் குழந்தைப் பருவத்திலேயே புகட்டப் பட வேண்டியது இன்றியமையாதது என்பதை ஏன் விவாதிப்பதில்லை ? குழந்தைகள் தமது தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும், பலவீனங்களைக் களைந்து கொள்ள வேண்டும், யாராவது ஏதாவது சொன்னால் சகிப்புத் தன்மையோடு அதைக் கேட்டுக் கொள்ளவேண்டும், கொள்ள வேண்டியவற்றைக் கொள்ளவும், தள்ள வேண்டியவற்றைத் தள்ளவும் பழக வேண்டும் என்பதெல்லாம் சொல்லி வளர்க்காத தன்மை தானே,திறமை வாய்ந்த மாணவர்களைக் கூட பலி வாங்கிக் கொண்டிருக்கிறது ? தமிழ்வழியில் படித்ததை ஏன் மாணவர்கள் கல்லூரியில் நுழையும் நேரத்தில் தலைக் குனிவாகக் கருத வேண்டும்? தாங்கள் தான் தவறு செய்துவிட்டோமோ என்று பெற்றோரும் சில வேலைகளில் தடுமாறும் இடமாக அது மாறிவிடுகிறது. மொழி பரிமாற்றத்தில் ஆங்கிலத்தின் இடம் சுயமதிப்பை இழக்கும் அளவுக்குச் சென்றது வேதனையானது. தாய்மொழிவழிக் கல்வியை உயர்கல்வியிலும் பெருமையோடு வழங்கி, வேலை வாய்ப்பையும் எதிர்காலத்தையும் உத்தரவாதப்படுத்தாத ஆட்சியாளர்களின் கொள்கை தடுமாற்றங்கள் ஏற்படுத்தும் பிரச்சனைகள் அல்லவா பிள்ளைகள் படும் பாடு? ஒட்டு மொத்த மாற்றங்களை உட்கொண்டு ஆரோக்கியமான கல்விச் சூழலைச் சமைத்திட வேண்டிய காலத்தின் அவசியம் முன்னெப்போதையும் விட இப்போது அதிகரித்திருக்கிறது. பத்திரிகைகளைப் புரட்டும் போதெல்லாம் தட்டுப்படும் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர் புகைப்படங்கள் மீது தெறிக்கும் பெருமூச்சு அதைத் தான் சொல்லிக் கொண்டே இருக்கிறது.-எஸ்.வி.வேணுகோபாலன்

செவ்வாய், 17 மே, 2011

மனசாட்சியை உலுக்கும் மாணவர் தற்கொலைகள் !

தில்லியிலிருந்து வெளிவரும் தெஹெல்கா இதழ் மாணவர்கள் தற்கொலை குறித்த அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளது. சாதிப் பாகுபாடு மனோபாவம் எனும் விஷக்கிருமிகள் மாணவர் சமுதாயத்திலும் பரவி, எப்படி உயிர்க ளைஅரி த்தெடுக்கின்றன என்பதை கட்டுரை யாளர் யாமினி குறிப்பிடுகிறார். இந்த ஆய்வுகளில் தமிழ்நாட்டின் மாணவர்களும் வெளிப்படையாகவே தங்கள் நிலையை விவரித்திருக்கிறார்கள்.

சம்பவம் 1

கோபாலுக்கு வயது 20. மத்தியபிரதேசம் டிகாம்கார் கிராமத்தில் தனது பள்ளிப்படிப்பை முடித்த அவர், உள்ளூரிலேயே தோட்டக்கலை படிக்கத் துவங்கினர். அவர் ஒரு தலித் என்பது மற்ற மாணவர்களுக்கு தெரியாது. தெரியப்படுத்த அவர் விரும்பவில்லை, அதற்கு காரணமும் இருந்தது.

கோபாலின் அண்ணன் பால் முகுந்த் மிகத் திறமைசாலி. ஐஐடி நுழைவுத் தேர்வில் தேசிய அளவில் 8 வது ரேங்க் பெற்ற அவருக்கு மருத்துவர் ஆவதில் விருப்பம். தில்லியில் உள்ள ஏஐஐஎம்எஸ் கல்லூரியில் இடம் பெற்ற அவருக்கு கல்விக்கடன் உதவியாக அமைந்தது. கல்லூரிக்கு மகிழ்ச்சியுடன் சென்ற கோபாலின் அண்ணனுக்கு பாடம் அத்தனை மகிழ்ச்சியாக இல்லை. பேராசிரியர்கள் அவரை பட்டியலின மாணவர் என்று குறிப்பிட்டவண்ணம் இருந்தனர். ஒரு கட்டத்தில் அவர் தனது பெயரை வேறாக மாற்றிக் கொள்ளலாம் என முடிவெடுத்தார். இந்த அளவு மன அழுத்தம் அவரை கடைசியில் தற்கொலைக்கு தள்ளியது. 2010 ஆம் ஆண்டு அவர் தற்கொலை செய்துகொண்டு மரணமடைந்தார். இது கோபாலின் மனதில் அழியாத பிம்பமாக படிந்துவிட்டது.

சம்பவம் 2

தில்லியில் அமைந்துள்ள உயிரி மருத்துவ அறிவியல் கல்லூரியின் ஆராய்ச்சி மாணவர் லினேஷ் மோகன். மத்தியப் பிரதேசத்தின் ஏழ்மையான கிராமத்தைச் சேர்ந்தவர் அவர். சென்ற மாதம் கோபாலின் அண்ணனைப் போலவே அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் 3

தமிழ்நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள கல்லூரியில் சமூகப் பணிகள் பாடத்தில் முதுகலைப் பட்டம் படித்து வருபவர் அருண்குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரும் கோபாலைப் போலத்தான். பல நாட்களாக தனது சாதியை மறைத்தே வசித்துவந்தார். அங்கான்வாடி பணியாளரான அவரது தாயும், விவசாயத் தொழிலாளியான தந்தையும் அவருக்கு இருந்தனர். ஏழ்மையான கிராமப் பின்புல வாழ்க்கையை வெளிக்காட்டிக் கொள்ள அவர் விரும்பவில்லை.

அருண் ஒருநாள் தனது கல்லூரி விழாவில் பறை இசைத்தபோது அவரது நேர்த்தியை அனைவரும் பாராட்டினார்கள். ஒருநாள் கல்லூரியில் ஆசிரியர் வெளிப்படையாக ”உன்னை தலித் ஆராய்ச்சியாளர்கள் பேட்டிக்காக அழைத்திருக்கிறார்கள்” என்று சொன்னது அருண் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. “எனது பறையாட்டத்தை ஏற்றுக் கொண்ட இந்த சமூகம், என் சமூகத்தை துரத்தியடிக்கிறது.” என வருத்தப்படுகிறார் அருண். இனிமேலும், தனது அடையாளத்தை மறைத்து வாழ்வது சாத்தியமற்றதே.

கல்லூரி வாழ்க்கையில் கனவுகளுடன் நுழையும் தலித் மாணவர்கள் உளவியல் அடிப்படையில் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். சேலம் அருகே ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்து தற்போது ஒரு நல்ல கல்லூரியில் தனது படிப்பை துவங்கியிருக்கும் கமலின் அனுபவத்தில் இருந்து இந்த உண்மையை புரிந்துகொள்ள முடியும்.

”ஒவ்வொரு செமஸ்டர் முடிவிலும், தன்னம்பிக்கையின் அளவு குறைகிறது. எனக்கு பல கேள்விகளுக்கு பதில் தெரிந்திருந்தும், ஆங்கிலத்தில் பேச தயக்கம் இருப்பதால் நான் வாய் திறப்பதே இல்லை. சேலத்தில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால், கல்லூரியில் ஆங்கிலம் என்னை மற்ற மாணவர்களிடம் இருந்து தனிமைப்படுத்திவிட்டது.” கமலின் பல மாலை நேரங்கள், அவரது அறைக்குள் தனியாகவே கழிப்பதாக மாறிவிட்டது.

உயர் கல்வி வகுப்புகளில் இடம் கிடைத்தபோதும், தலித் மாணவர்கள் ஒரு ஒதுக்கப்பட்ட உலகத்திலேயே வாழ்கிறார்கள். அதனால் ஏற்படும் மன உளைச்சல் அவர்களின் உயிரைக் காவு வாங்கி விடுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், 18 தலித் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அவர்கள் இந்தியாவின் உயர்ந்த கல்விச் சாலைகளான ஐஐடி உட்பட 16 முக்கிய கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் பதிவு செய்யப்படாத தற்கொலைகளின் அளவு இன்னும் அதிகமாக இருக்கலாம்.

தற்கொலைகள் என்பவை ஒரு வெடிப்பு நிலையே, உளவியல் பாதிப்புகள் அந்த மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிவிடலாம். சமூகத்தின் வேரில் பீடித்துள்ள தீண்டாமை, சாதி ஆதிக்க மனோபாவத்தின் இந்த வெளிப்பாடு நம் உயிரை உலுக்கியெடுக்கிறது.

இட ஒதுக்கீட்டின் மூலம் சில சொற்ப தலித் மாணவர்களே உயர் கல்விக்கான வாய்ப்பை பெறுகிறார்கள். இந்த எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமானால், சட்டப்படியான உரிமை யை அமலாக்கிடுவது மட்டு மல்ல, இந்த சமூகத்தின் சிந்தனையில் மாற் றத்தை ஏற்படுத்திடவும் போராட வேண்டும்.

வியாழன், 17 பிப்ரவரி, 2011

தற்கொலைகள் விடுக்கும் அவசர எச்சரிக்கை

இந்தியாவில் சராசரி ஐந்து நிமிடத்திற்கு ஒரு வர் தற்கொலை செய்துகொள்கிறார் என ஒரு ஆய் வில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளி வந்துள்ளது. தற்கொலை செய்துகொள்ளும் மூவரில் ஒருவர் இளைஞராக, அதுவும் 15-25 வயதிற்கு உட்பட்ட வராக உள்ளார் என்பது மேலும் கவலை அளிக் கக்கூடியது.

விவசாயிகள் தற்கொலை சமூகப் பொருளா தாரக் காரணங்களால் நடைபெறுவதை அறிவோம். ஆயினும், அதுகுறித்து அரசு இன்னும் போது மான அக்கறை செலுத்தாததும்; ஊடகங்கள் விவசாயிகள் தற்கொலை குறித்து போதுமான செய்திகள் வெளியிடாததும் நமது மரத்துப்போன இதயத்தின் சாட்சிகளாகும்.

தமிழ்நாட்டில் சென்னையில் கல்லூரி மாணவி திவ்யாவின் தற்கொலை சமீபத்தில் அனைவரையும் உலுக்கியது. ஒடுக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வரும் ஒரு பெண்ணை ஆதா ரம் இல்லாமல் திருடி என சந்தேகப்பட்டதால் ஏற்பட்டக் கோரம் இது. இதில் ஆசிரியர்களின் பொறுப்பின்மையும் ஒடுக்கப்பட்ட மக்கள் பால் ஒருவித அருவருப்பான அணுகுமுறையும் ஒரு சேர வெளிப்படுகிறது. சாதிய சமூகத்தின் கோர முகம் இது. இந்த ரணம் ஆறும்முன் புளியந்தோப் பில் மாணவி தேன்மொழி தற்கொலை செய்து கொண்டதும், கும்பகோணத்தில் மாணவி சூரியா தற்கொலை செய்து கொண்டதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துகின்றன.

பொதுவாக டீனேஜ் என்று சொல்லப்படுகிற விடலைப் பருவத்தில் இளைஞர்களின் மன நிலை உணர்ச்சி வயப்பட்டிருக்கும் என்பதை உணராமல் அவர்களின் சுயமரியாதையை காயப் படுத்தும் விதத்தில் தண்டனைகள் வழங்கு வதும் அவமானப்படுத்துவதும் பெருங்குற்றமே. பொறுப்பில் உள்ளவர்கள் இளைஞர்களின் மனக் கொதிப்பை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். அவர்கள் செய்கிற சிறு தவறுகளை அன்போடு தனிமையில் எடுத்துச் சொல்லி திருத்த முடியும். அதற்கு மாறான எந்த அணுகு முறையும் எதிர்பார்த்தப் பலனைத் தராது. மாறாக எதிர்விளைவை உருவாக்கும்.

மாணவர்களுக்கு, வெற்றியை மட்டுமல்ல தோல்வியை தாங்குவதற்கும் பயிற்சி தேவைப் படுகிறது. வாழ்க்கை என்பது மேடு-பள்ளம், வெற்றி-தோல்வி, புகழ்-இகழ் என எதிர்மறை களின் கூட்டுதான் என்பதை நமதுப் பாடத்திட் டம் கற்றுத்தர வேண்டும். கல்வி என்பது மதிப் பெண்ணை வாங்கும் உத்தி மட்டுமல்ல, வாழ்க் கையை, சவால்களை எதிர்கொள்கிற பக்குவத் தை வளர்ப்பதும்தான். ஆனால், இன்றைய உலகமயச் சூழலில் போட்டியும் வேகமும் இளைஞர்களை நிலைகுலைய வைக்கிறது. அதன் எதிரொலியே பெருகும் தற்கொலைகள்.

பொதுவாக தற்கொலைகளில் ஆண்களை விட பெண்களே அதிகம் ஈடுபடுவது ஏன்? நடி கைகள் தற்கொலைதான் தொடர்ந்து நாம் கேள் விப்படும் செய்தியாக இருக்கிறது. ஆனால், நடி கர்கள் தற்கொலை அபூர்வமானது ஏன்? இதி லும் பாலின பாகுபாடும் பெண்களுக்கு இளமை முதலே ஊட்டப்படும் சுயபச்சாதாபமும் தன் னம்பிக்கையின்மையும் யாரையாவது சார்ந்து தான் வாழ முடியும் என்கிற கருத்தோட்டமும் பெண்களை எளிதில் தற்கொலைக்குத் தூண்டுகிறது.

தற்கொலை எந்தப் பிரச்சனைக்கும் தீர்வாகாது. தற்கொலையை ஒருபோதும் ஆதரிக்க முடியாது. தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வை, போராட்ட உணர்வை, தன்னம்பிக்கையை வளர்க்கவும் அதே நேரத்தில் தற்கொலைக்கான சமூக பொருளாதார பண்பாட்டு காரணங்களை தேடி ஆய்ந்தறிந்து அகற்றவும் அரசும் கல்வியாளர்களும் அறிவு ஜீவிகளும் ஊடகங்களும் தொண்டு நிறுவனங்களும் பெற்றோர் களும் கூட்டாக முயற்சிக்க வேண்டும். சமீபத் திய அடுக்கடுக்கான தற்கொலைகள் அவசர மாக நமக்கு உணர்த்தும் செய்தி இதுதான்.

புதன், 1 டிசம்பர், 2010

அமெரிக்க ராணுவத்தினர் தற்கொலை அதிகரிப்பு

பாதுகாப்புப் பணியில் இல்லாத அமெரிக்க ராணுவத் தினர் தற்கொலை செய்து கொள்வது 2010 ஆம் ஆண்டில் அதிகரித்திருக்கிறது.

எப்போதுமே போரை எதிர்நோக்கும் அமெரிக்க ராணுவத்தினர் பணிக்குச் செல்லாத காலத்தில் போதை மருந்துகளுக்கு அடிமையாகி விடுகிறார்கள். இதைத் தடுப் பதற்காக அமெரிக்க ராணுவம் எவ்வளவோ முயற்சிகளை செய்து பார்த்துவிட்டது. மன அழுத்தம், பணிக்காலத்தில் மூளையில் ஏற்பட்ட பாதிப்பு, நாட்டின் பொருளாதார நெருக்கடியால் இவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு ஆகி யவற்றால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுக் கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

தற்கொலைகளைக் குறைக்க அமெரிக்க ராணுவத்தால் ஒரு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. தற்கொலைக் கான காரணங்களை அந்தக்குழுவின் துணை அதிகாரி கிரிஸ் பில்பிரிக் பட்டியலிடுகிறார். நடப்பாண்டில் மட் டும் அக்டோபர் மாதம் வரையில் 86 ராணுவத்தினர் தற் கொலை செய்திருக்கிறார்கள். கடந்த ஆண்டில் தற் கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 48 ஆக இருந்தது. மேலும் இரு மாதங்கள் இருப்பதால் தற் கொலை எண்ணிக்கை நடப்பாண்டில் நூறைத் தொட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணியில் இருப்பவர்களுக்கு மனரீதியான பாதிப்பு களுக்கான சிகிச்சைகள் உடனுக்குடன் அளிக்கப்படு கிறது. பணியில் இல்லாதவர்களுக்கு இந்த சிகிச்சை தாம தமாக அளிக்கப்படுவதும் முக்கியமான காரணம் என்று கிரிஸ் பில்பிரிக் குறிப்பிடுகிறார்

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

அதிகரிக்கும் தற்கொலை... அதிர்ச்சியூட்டும் பின்னணி!

“ஜூலை இரண்டாவது வாரத்தில் கவிதா (திருப்பூர் நகர் அருகிலுள்ள பள்ளிப்பாளையம்) என்ற 35 வயதுப் பெண்மணி தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் கிணற் றிலே தள்ளிவிட்டு பிறகு தானும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். குடும்பக்கட னை அடைக்க நிலத்தை விற்க, தனது கணவன் முயற்சித்ததைக் கண்டு மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தைப் பாது காக்க நடத்திய போராட்டத் தில் தோல்வியுற்ற பிறகே இத்த கைய சோகமான முடிவுக்கு வந்தார்”

டெக்கான் கிரானிக்கல் (23-07-2010)

இது ஒரு சம்பவம் மட்டுமல்ல, 2010 ஜனவரி முதல் ஜூன் வரையில் திருப்பூர் நகரிலும், அருகிலுள்ள பகுதிகளிலும் சுமார் 350 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைக்கு பிர தானமான காரணம், கந்துவட்டிக் கொடு மை மற்றும், வறுமைதான் என பத்திரி கைகளின் ஆய்வுகள் கூறுகின்றன.

ஆண்டுக்கு 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் டாலர் கொழிக்கும் நகரத்தில் தான் மேற்கண்ட சோகம் நிகழ்ந்துள்ளது. இது திருப்பூர் நகரத்தில் உள்ள நிலைமை மட்டுமல்ல. இதைப் போலவே, சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்திலுள்ள செம்மாண்ட பட்டி கிராமத்தில் நெசவுத்தொழிலாளர் குடும்பத்தைச் சார்ந்த 5 பேர் வேலை யில்லாததால் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற செய்தி பத்திரிகையில் வெளியானது. வயதான தந்தை, தாய் மற்றும் மருமகள், எட்டுவயது பேரன், 2 வயது பேத்தி ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட சோக நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன்பு நடந்துள்ளது. மாநிலம் முழுவதும் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள் இத்தகைய அவல நிலைமையில்தான் வாழ்ந்து வருகிறார்கள்.

இத்தகைய நிலைமை திடீரென்று ஒரு நாளில் உருவாகிவிட வில்லை. கடந்த 20 ஆண்டு காலமாக அகில இந் திய அளவில் மத்திய அரசு கடைப் பிடித்து வரும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைதான் மக்களை தற்கொலை யை நோக்கி தள்ளுகிறது. குறிப்பாக 2009ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ் தலைமையி லான திமுக இடம் பெற்றுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட் டணி அரசு கடைப் பிடித்துவரும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கை ஏழை, எளிய உழைக்கும் மக்களை வாழ்க் கையின் விளிம்புக்கே விரட்டி விடுகிறது.

தாராளமயப் பொருளாதார கொள்கை யினால் இந்திய பொருளாதாரம் கடந்த ஆண்டு 7.4 சதவிகிதம் வளர்ந்துள்ளதாக மத்திய அரசு தம்பட்டம் அடிக்கிறது. இந்த வளர்ச்சி யாருக்குப் பலன் அளித்துள்ளது என்பதுதான் பிரச்சனை. 2004ஆம் ஆண்டு ரூபாய் 4,600கோடியும், அதற்கும் கூடுதலாக சொத்துள்ளவர்களின் எண் ணிக்கை 9. ஆனால் இத்தகைய பெரு முதலாளிகளின் எண்ணிக்கை 2010இல் 49 ஆக உயர்ந்துள்ளது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதும், ஏழைகள் மேலும் ஏழைகளாவதும் மத்திய-மாநில அரசுகள் கடைப்பிடித்து வரும் தாராள மயப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவே ஆகும்.

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 45 கோடிப்பேர் கருத் தாலும், கரத்தாலும் உழைத்து வாழ்பவர் கள். இதில் விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட முறைசாராத் தொழிலாளர்கள் 39 கோடிப்பேர். இவர்கள்தான் நகர்ப்புற, கிராமப்புற ஏழை உழைக்கும் மக்கள். இதில் தலித், பழங்குடி மற்றும் சிறு பான்மை பகுதியைச் சார்ந்த முறைசாரா தொழிலாளர் குடும்பங்கள் சமூகக் கொடு மைகளுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.

மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற ஐக் கிய முற்போக்குக் கூட்டணி அரசு -2 தனது முதல் பட்ஜெட்டில் மக்கள் மீது ரூ.60,000கோடி அளவுக்கு பாரத்தை சுமத் தியது. அதே நேரத்தில், முதலாளிகளுக்கு ரூ.26,000 கோடிக்கு சலுகை அளித்தது. மூன்றே மாதங்களில் இரண்டாவது முறையாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியது. மத்திய அரசி னுடைய இத்தகைய மக்கள் விரோதக் கொள்கையை எதிர்த்து கடந்த ஏப்ரல் 27 அன்றும், ஜூலை 5 அன்றும் தமிழகம் உட்பட நாடு தழுவிய கடையடைப்புப் போராட்டம் நடத்தினோம். அரசின் கொள்கையில் மாற்றம் ஏற்படாததால், தற்பொழுது ஆகஸ்ட் 22 முதல் 29 வரை மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வருகிறது.

-ஜி.ராமகிருஷ்ணன் மாநிலச் செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

திங்கள், 15 டிசம்பர், 2008

டிவி பார்க்கும் தகராறில் தாய் மகள் தற்கொலை.

கல்லூரி மாணவி தொலைக்காட்சி பார்த்து கொண்டுயிருந்தால் தாய் ஏண் இப்படி எந்த நேரமும் டிவி பார்த்துக்கொண்டுயிருக்கிறாய் என்று கேட்க வாக்கு வாதம் வளர கல்லூரிமாணவி உடனே தன்னுடைய அறையின் கதவை தால்இட்டு தற்கொலை செய்துகொண்டால் . உடனே தாய்யும் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சமூகம் கட்டமைக்கும் எல்லாவித மனப்பான்மையும் அப்பட்டமான அம்மனமான சீர்அழிவு நுகர்வு காலச்சாரத்தின் இலாப நோக்கமே இதுபோன்ற சம்பங்கள் நாட்டில் அதிகம் நடப்பதற்கு காரணம் என்றாலும் நாம் போய் கொண்டுயிருக்கிற பாதை சரியானதா ?

பிரச்சனை வடிவத்ததை கூட சரியாக புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவே கருதவேண்டி இருக்கிறது. தன்னுடைய கருத்துக்கு முக்கியத்துவம் இல்லா நிலை தன்னை மதிக்காத தாய் என்ற காரணத்திற்காக மகளும் . நான் விசிய வார்த்தைகள் 21 வருடம் வளர்த்த மகளின் உயிரை பரித்துவிட்டதே என்று தாய்யும் தற்கொலை செய்துகொண்டது யாதார்தமான நிகழ்வு அல்ல.

சனி, 23 ஆகஸ்ட், 2008

மனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன?

21ம் நூற்றான்டின் முக்கிய நோய்யாக மனஅழுத்தம் இருக்கும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. இப்போது எல்லாம் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய்க்கு அடுத்தப்படியாக மனஅழுத்த நோய்களுக்கு என டாக்டர்களிடம் செல்பவர்களின் எண்னிக்கை அதிகமாகும்.
மன அழுத்தம் மிகவும் கொடுமையானது இயல்பான வாழ்க்கையைப் பறித்து நிம்மதியற்ற பொழுதுகளையும், நோய்களையும் தந்து செல்லும் இந்த மன அழுத்தம். குறிப்பா இன்று 5 முதல் 20 வயதில் உள்ளவர்கள் அதிக மனஅழுத்தத்தில் அவதிப்படுகின்றனர்.

உலகில் உள்ளமக்கள் தொகையில் 69% பேர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
76% பேர் போதுமான உறக்கம் இல்லாமல் உள்ளனர்.
77% பேர் குடும்ப உறவுகளினால் மனஅழுத்திற்கும், மனோபயத்திற்கும் ஆளாகியுள்ளனர் .
50% பேர்களுக்கு புதிய பொருள்களை நுகரமுடியவில்லை என்பதே பெரிய கவலையாக உள்ளது .
55% பேர்களுக்கு குறைந்த நன்பர்களே உள்ளனர்.
58% பேர்கள் தலைவலியால் அவதிபடுகின்றனர்.
70%
பேர் உடனே கோவப்படுபவர்களாக உள்ளனர்.
அதிகமான மனஅழுத்தம் ஓரு நபரின் உயிரியல் வயதை 30 வருடங்கள் கூட்டுகிறது என்றும், சமிபத்திய ஆய்வு கூறுகிறது.

அதுமட்டுமல்லாது மனஅழுத்தம் அதிகமாகி தற்கொலை நிகழ்வுகளும் அதிகரிக்கும் அளவுக்கு இந்நோய் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.கடந்த 2004 - 2008 மட்டும் 16000 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.அதேபோல் 2006ல் மட்டும் 5857 மாணவர்கள் தேர்வு பயத்தால் மட்டும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறோம்.

மனஅழுத்தம் எதனால் ஏற்படுகிறது?

அழுத்தம் இருவகையில் வரலாம். ஒன்று நம்மைச் சூழ்ந்த சமூகத்தின்செயல்பாடுகளால் நமக்குள் வருவது. இன்னொன்று நம்முடைய வாழ்க்கைமுறை, சிந்தனைகளினால் வருவது.

ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக சிரத்தை, குழப்பம் இவையெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணிகள். சிலருக்கு அதிக வெளிச்சம், அதிக சத்தம் போன்ற காரணங்களாலும் மனஅழுத்தம் உண்டாகிறது.

பிறப்பு, இறப்பு, போர்கள், திருமணங்கள், விவாக ரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, பெயர் இழத்தல், கடன், வறுமை, தேர்வு, போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் நம்மை இட்டுச் செல்ல முடியும்.

தவறான பழக்கங்களின் மூலம் உண்டாகும் மனஅழுத்தம்?

புகை பிடித்தல், சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, போதை மருத்து பழக்கம், குடிப்பழக்கம், சரியான தூக்கம் இல்லாமை இவையெல்லாம் மன அழுத்தத்தை நாம் விலை கொடுத்து வாங்கும் செயல்கள். புகை பிடிக்கும்போது உடலில் கலக்கும் நிக்கோட்டினுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.

மனஅழுத்தால் உண்டாகும் நோய்கள்
என்ன?

மன அழுத்தம் பல நோய்களைக் கொண்டு வரும். குறிப்பாக மைகிரேன்எனப்படும் ஒற்றைத் தலைவலி, ஸ்ட்ரோக், எஸீமா உட்பட பல நோய்களைமன அழுத்தம் கொண்டு வருகிறது.

தலைவலி, அஜீரணக் குறைபாடுகள், தூக்கமின்மை, தசைப்பிடிப்பு, உடல் வலி, நெஞ்சு வலி, சீரற்ற இதயத் துடிப்பு, உயர் இரத்த அழுத்தம், உடல் எடைஅதிகரித்தல், குறைதல், ஆஸ்த்மா, மூச்சுத் திணறல், தோல் நோய்கள், தாம்பத்தியக் குறைபாடுகள், புற்று நோய், அல்சர், சர்க்கரை நோய்,

குழந்தைகளிடம் மன அழுத்தம் அற்ற நிலையை உருவாக்க

குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகரித்து வருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

பெற்றோருக்குள் ஏற்படும் சண்டை, கவனிப்பின்மை போன்ற காரணங்களால், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அன்புக்கு ஏங்குகின்றன. இதுவே, மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடுகிறது. துõக்கமின்மை, உணவில்ஆர்வமின்மை, சோம்பல் போன்றவை ஏற்பட்டால், உடனே குழந்தைகளைடாக்டரிடம் காட்ட வேண்டும்.தாழ்வு மனப்பான் மைக்கு, சிகிச்சை அளிக்கவேண்டும். நாளடைவில் இது குறைந்து விடுகிறது. ஏழு வயதில் இருந்து பத்துவயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இதில் அதிகம் பாதிக்கப்படுவதாக டில்லியில்நடந்த ஓர் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது

தினமும் குழந்தைகளுடன் உரையாடுங்கள். அவர்களுடைய தினம் எப்படிசெலவழிந்தது. என்னென்ன செயல்கள் நடந்தன என்றெல்லாம்உரையாடுங்கள். அழுத்தமான சூழல் இருப்பது போல உணர்ந்தால் அதிலிருந்துஎப்படி விடுபடுவது என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.

உங்கள் பிரச்சனைகளை குழந்தைகள் மேல் எக்காரணம் கொண்டும்திணிக்காதீர்கள். அவர்களுக்கு குடும்பத்தின் தேவை மற்றும் அமைதியானவாழ்க்கையின் அவசியத்தை வலியுறுத்துங்கள்.

குழந்தைகள் எதையாவது செய்யும் போது மனம் விட்டுப் பாராட்டுங்கள். அவர்களை அரவணைத்துச் செல்ல மறக்காதீர்கள். அவர்கள் இசை, பெயிண்டிங், நடனம் போன்றவற்றில் ஈடுபட தூண்டுங்கள்.

நகைச்சுவை உணர்வுள்ள குழந்தையாக உங்கள் குழந்தையை வளர்க்கமுயலுங்கள். அது இறுக்கமான சூழல்களை குழந்தைகள் சமாளிக்கபிற்காலத்தில் பயன்படும்.

குழந்தைகள் எப்போதும் எதிலும் முதன்மையாக வரவேண்டும் எனஎதிர்பார்க்காதீர்கள். அது தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கி விடும். எல்லோரும் முதலாவதாக வருவது நடப்பதில்லையே. விடுமுறைகள், மாலை வேளைகளை சற்று இலகுவாகவே வைத்திருங்கள். அதிகப்படியானகல்வியும் மன அழுத்தத்தை நல்கும் என்பதை மறவாதீர்கள். தோல்வியும்வெற்றியும் சகஜம் என்னும் மனநிலையைக் கொண்டிருங்கள் அல்லதுஎதிர்காலத்தில் குழந்தை தோல்விகளைச் சந்திக்கும் போது உடைந்து போகும்வாய்ப்பு உண்டு.

உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஒரு நல்ல முன்மாதிரியாக இருங்கள். குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் தந்தை குழந்தை குடிக்கக் கூடாது எனஅறிவுரை சொல்வது பாதிப்பை ஏற்படுத்தாது. குழந்தைகளுடன் நேரம்செலவிடுவதும், அவர்கள் பதின் வயது எட்டுகையில் நல்ல நண்பர்கள், உறவினர்களுடன் ஆரோக்கியமான நட்பு வைத்துக்கொள்ள தூண்டுவதும், உடற்பயிற்சிகள் செய்யத் தூண்டுவதும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

மனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன?

மன அழுத்தத்தைக் கையாள்வதற்கு நம்முடைய மனதின் சிந்தனைகளைதூய்மைப்படுத்த வேண்டும். எதிர்மறைச் சிந்தனைகள் பெரும்பாலும் மனஅழுத்தத்தையே அளிக்கின்றன. எனவே நல்ல சிந்தனைகளை வளர்த்துக்கொள்வதன் மூலம் மன அழுத்தத்தைக் கையாள முடியும்.

அமைதியான குடும்பச் சூழல் பெரும்பாலான மன அழுத்தத்தைக்குறைக்கிறது. அலுவலகத்தின் குழப்பங்களையோ, எரிச்சல்களையோகுவிக்கும் இடமாக குடும்பம் இருக்கக் கூடாது, மாறாக அவற்றை அழிக்கும்இடமாகவே குடும்பம் இருக்க வேண்டும் என்பதனை குடும்பத்தினர் புரிந்துகொள்ளவேண்டும். குடும்பத்தில் நுழைந்தவுடன் மனம் மகிழ்ச்சியடையும்வகையில் குடும்பத்தினரோடு அன்பான வாழ்க்கை வாழ்தல் மிகவும்முக்கியம்.

எத்தனை இறுக்கமான சூழலாக இருந்தாலும் சிரிக்கக் கற்றுக் கொண்டால்பிரச்சனைகள் பல காணாமல் போய்விடும். நல்ல நகைச்சுவைஉரையாடல்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இது இரத்த அழுத்தத்தைக்கட்டுக்குள் வைக்கும். தசைகளை இறுக்கமற்ற நிலைக்கு கொண்டு செல்லும். நுரையீரலுக்கு சுத்தமான காற்றை கொண்டு செல்லும் எனவே மனஅழுத்தத்தைக் குறைக்க சிரியுங்கள் என்கிறார் மனோ தத்துவ நிபுணர் லீபெர்க்.

குடும்பங்களில் பிரச்சனைகள் வருவது சகஜம். கணவன் மனைவியரிடையேபிரச்சனை வரும்போதுஉன்னால் தான் வந்ததுஎன்று பழியை மாறி மாறிசுமத்தாமல்நமக்கு பிரச்சனை இருக்கிறதுஎப்படி தீர்வு காண்பது எனும்கண்ணோட்டத்தில் பேச வேண்டும் என்கிறான் பிரபல அமெரிக்கஉளவியலாளர் வில்லார்ட் எஃப் ஹார்லே.

மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்.

* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.

* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில்வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக்குறைக்கும்.

* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்யவேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.

* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரைகாத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

* வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்ய முயலுங்கள் காலணிஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மனஅழுத்தத்தைத் தரக் கூடும்.

* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

* காஃபி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்

* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ்தாமதமானால் இதைச் செய்வேன்என்பது போன்றவை.

* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டேஇருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்துமகிழுங்கள்.

* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயேதெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

* சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்துவிடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி.

* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால்மன்னிக்கவும்.. என்னால்செய்ய இயலாதுஎன்று சொல்லப் பழகுங்கள்.

* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம்கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

* எளிமையாக வாழுங்கள்.

* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்றதூக்கத்துக்கு அது உதவும்.

* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.

* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்கஎழுத்து வடிகாலாகும்.

* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரியநண்பர்களிடம் பகிருங்கள்.

* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச்செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்துசெயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

* என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்துபிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பதுநிரூபிக்கப்பட்ட உண்மை.

* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொருவேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதைபுத்துணர்ச்சியாக்குங்கள்.

* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனேநடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதைஇலகுவாக்கும்.

* மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக்காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்குவசப்படும்.