நடத்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நடத்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 ஜூலை, 2013

மன அழுத்தம் உண்டாக்கும் மனச்சோர்வு

மனச்சோர்வில் இந்தியரகளுக்குதான் முதலிடம்!! உலக சுகாதாரக்கழகத்தின் சாரபில் நடைபெற்ற ஆய்வில் மனதளவில் பெரிய அளவில் சோரவாக இருப்பவரகளில் இந்தியரகள்தான் அதிகமானவரகள் என்று தெரிய வந்துள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்படி சீனரகள்தான் அதிக மகிழ்ச்சியோடு வாழ்கிறாரகள். தங்கள் வாழ்நாளில் மனச்சோரவு நீடித்த வண்ணம் இருந்தது என்று 9 விழுக்காடு இந்தியரகள் கருத்து தெரிவித்திருக்கிறாரகள். மிகவும் கடுமையான மனச்சோரவு கொண்ட காலத்தை அனுபவித்தோம் என்று 36 விழுக்காடு இந்தியரகள் கருத்து தெரிவித்துள்ளனர. இந்தியாதான் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 18 நாடுகளில் அதிக அளவு மனச்சோரவு உடையதாக இருக்கிறது.

பி.எம்.சி. மருத்துவ சஞ்சிகை ஒன்றில் இந்த ஆய்வு விபரங்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 18 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.அதிக வருமானம் ஈட்டும் நாடுகள் என்ற பிரிவில் பத்து நாடுகள் உள்ளன. பெல்ஜியம் பிரான்ஸ் ஜெரமனி இஸ்ரேல் இத்தாலி ஜப்பான் நெதரலாந்து ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகியவை  அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. நடுத்தர அளவில் வருமானம் ஈட்டக்கூடிய நாடுகளின் பட்டியலில் பிரேசில் கொலம்பியா இந்தியா சீனா லெபனான் மெக்சிகோ தென் ஆப்பிரிக்கா மற்றும் உக்ரைன் ஆகிய எட்டு நாடுகள் உள்ளன. வளரச்சி குறித்து உலக வங்கி நிரணயித்திருக்கும் தரத்தின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.

மனச்சோரவு என்பது ஆயுட்காலத்தைக் குறைக்கும் காரணியில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது என்கிறாரகள் ஆய்வாளரகள். உலகம் முழுவதும் சுமார 12 கோடிப்பேர மனச்சோரவால் பாதிக்கப்பட்டுள்ளனர. குறிப்பாக 15 வயது முதல் 44 வயது வரை உள்ளவரகளுக்குதான் அதிக பாதிப்பாகும். மிகவும் கடுமையான மனச்சோரவு பற்றிய ஆய்வு புருவத்தை உயரத்தச் செய்யும் தகவல்களைத் தந்துள்ளது. பணக்கார நாடுகள் அதாவது வருமானம் அதிகம் ஈட்டக்கூடிய நாடுகளில்தான் இந்த பாதிப்பு அதிக அளவில் உள்ளது. நடுத்தர அளவில் வருமானம் ஈட்டக்கூடிய நாடுகளில் எதிரபாரத்ததைவிடக் குறை வானதாகவே இருக்கிறது.

அமெரிக்கா பிரான்ஸ் உள்ளிட்ட பணக்கார நாடுகளில் தவறான கொள்கைகளால் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி பயங்கரவாதத் தாக்குதல் தொடரபான அச்சம் ஆக்கிரமிப்பு பணிகளில் ஈடுபடும் ராணுவத்தினருக்கு ஏற்படும் மனரீதியான பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர. அமெரிக்க வேலையின்மை அதனால் உருவான பிரச்சனையான வீடின்மை அந்நாட்டு மக்களிடம் வாழ்க்கை பற்றிய கவலையை உருவாக்கியுள்ளதை மனிதவள வல்லுநரகள் சுட்டிக்காட்டுகிறாரகள். அதற்கு மாறாக பொருளாதார நெருக்கடியை எதிரகொள்ள சீனா உள்நாட்டுப் பொருளாதாரத்தை பலப்படுத்தும் வேலையைச் செய்தது. அதனால்தான் அந்நாட் டில் மனச்சோரவு குறைவு என்பது அந்த வல்லுநரக ளின் கருத்தாகும்.

கடுமையான மனச்சோரவு இந்தியாவில்தான் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது. கவலை துக்கம் தவறு செய்துவிட்டதாகக் கருதுதல் தாழ்வு மனப் பான்மை தூக்கமின்மை பெரும் கவனக்குறைவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் இது குறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. முக்கியமான நாடுகளில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரான்ஸ் அமெரிக்கா ஜெரமனி சீனா என்ற வரிசையில் இந்தப் பாதிப்பு இருக்கிறது. உலகிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்ட சீனாவில் மனச்சோரவு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. மற்ற நாடுகளைவிட சீனாவின் குடிமக்கள் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறாரகள் என்பது இந்த ஆய்விலிருந்து தெரிய வருகிறது.

மனச்சோர்வு அல்லது உளச்சோரவு நோய்

மனக்கவலை அதிகாலை தூக்கமின்மை
மிகுந்த சோர்வு பசியின்மை
எடை குறைவு அடிக்கடி அழுதல்
தன்னம்பிக்கையின்மை
எதிலும் ஆரவமின்மை
அதிகமான குற்ற உணர்வு

புதன், 27 மார்ச், 2013

பேய் - உளவியல் பார்வை


பல வருடங்களுக்குப் பின், கல்லூரி நண்பனை எதேச்சையாக வழியில் சந்திக்கிறீர்கள். இழந்த இளமை சற்றே எட்டிப் பார்க்க ஆனந்தமாக அவருடன் ஒரு உணவகத்துக்குச் சென்று உரையாடுகிறீர்கள். பல விசயங்கள் பேச்சினிடையே வந்து போகின்றன. கல்லூரி நாட்களில் மிகவும் நியாயமானவனும், நேர்மையானவனும் என்று மதிக்கப்பட்ட நண்பன் அவன். திடீரெனப் பேச்சு வேறு ஒரு திசைக்கு மாறுகிறது. நண்பன் உங்களிடம் கேட்கிறார், 

"டே மச்சான், "பேய் இருக்குன்னு நம்புறியா?"

"என்ன மச்சி! திடீர்ன்னு இப்படிக் கேட்கிற? பேய்கள், ஆவிகள் எதையும் நான் நம்புவதில்லைடா" 

"எனக்குத் தெரியும்டா மச்சான், நீ நம்பமாட்டன்னு. ஆனால் பேய் இருக்குடா. நான் அதைப் பார்த்தேன்"

"என்னடா சொல்றா? பார்த்தியா? யார், நீயா, எப்படா? என்ன விளையாடுறியா?"

"இல்லை உண்மையாத்தான் சொல்கிறேன் மச்சி. பலவாட்டி, பல உருவங்களில் பேயைப் பார்த்திருக்கிறேன்"

"என்னடா சொல்ற? நம்புற மாதிரியா இருக்கு? நிஜமாவா?"

"உண்மையா தான்டா. அதுமட்டுமில்லை, சில தடவை அது எங்கிட்ட பேசுது. அதை நான் தெளிவாகக் கேட்டிருக்கிறேன்டா"

"என்னடா நீ! இப்பிடிச் சொல்ற? எனக்கு இப்பவே ஒரு மாதிரி இருக்கு...."

"என் காதுல அது பேசுறது கேக்கும் மச்சி. அப்பப்போ அந்த நேரத்துல மல்லிகைப் பூ வாசனையும் சேர்ந்து வருது. அப்படின்னா ஆவிகள், பேய்கள் இருக்குன்னு தானே அர்த்தம்"

"லூசு மாதிரி உளராதே! நீ சீரியஸாக சொல்றியோ என்று நானும் பயந்துட்டேன்"

"இல்லடா நான் சீரியஸாகத்தான் சொல்றேன். என்னைப் பார்த்தால் பொய் சொல்றவன் மாதிரியா உனக்குத் தெரியுது?"

”அதைத்தானே நானும் யோசிச்சு குழம்பு போயிட்டேன். வேறு யாராவது இப்படிப் பேசினால், போடா வென்று.. சொல்லிட்டு போயிருப்பேனே. நீ பேச்சுக்குக் கூடப் பொய் சொல்பவனில்லையே!"

உங்களுக்கும், நண்பருக்குமிடையே நடந்த இந்த உரையடல்களில் இருந்து நீங்கள் புரிந்து கொள்வது என்ன?பேய், ஆவி போன்றவை இருக்கிறது என்று நம்புபவர்கள் இந்த உரையாடலை நிச்சயம் நம்புவார்கள். பேயை நம்பாத சிலர் உங்கள் நண்பருக்குப் பைத்தியம் என்னும் அதிகபட்ச முடிவுக்கு வந்துவிடுவார்கள். உங்கள் நண்பர் பொய் சொல்கிறார் என்றும் சிலர் நினைக்கலாம். இந்தச் சம்பவத்தில் உங்கள் நிலை என்ன? என்ன விதமான முடிவை எடுக்கப் போகிறீர்கள்? அந்த உரையாடலைச் சரியாகக் கவனித்துப் பாருங்கள். அதில் பேய் பற்றிச் சொன்ன உங்கள் நண்பர் ஒரு நம்பிக்கையானவர் என்று நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள். அப்படிப்பட்டவர் பொய் சொல்வாரா? அப்படிப் பொய் சொல்ல வேண்டும் என்ற அவசியம் அவருக்கு ஏன் வரப்போகிறது?

அப்படியென்றால் என்னதான் நடந்தது? உங்கள் நண்பர் பொய் சொல்லவில்லை என்பதுதான் உண்மை. அவருக்கு உருவங்கள் தெரிந்ததும், காதில் குரல் கேட்டதும், மல்லிகைப்பூ வாசனை வந்தது அனைத்துமே உண்மைதான். அப்படியென்றால் பேய்கள், ஆவிகள் உள்ளன என்பதுதான் முடிவா? இல்லை! அதுவும் இல்லை. பேய் என்பது இல்லவே இல்லை! ரொம்பத் தெளிவாகக் குழப்புகிறேன் அல்லவா? இதை விளக்கமாகப் பார்ப்போமா......! 

உங்களுக்கு முன்னால் ஒரு ரோஜாப்பூவும், ஒரு மல்லிகைப்பூவும் வைக்கப்படுகிறது. அதில் நீங்கள் ரோஜாப்பூவை அப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறீர்கள். ஆனால் மல்லிகைப்பூவை ஏற்கனவே பலமுறை பார்த்து இருக்கிறீர்கள். அதை மல்லிகைப்பூவென்று தெரிந்தும் வைத்திருக்கிறீர்கள். மல்லிகைப்பூவைப் பார்த்ததும் அதை, 'மல்லிகைப்பூ' என்று உடனே சொல்லி விடுகிறீர்கள். ஆனால் ரோஜாப்பூவை, ரோஜாவென்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள். காரணம் ரோஜாப்பூவைப் பற்றிய எந்த ஒரு செய்தியும் அதுவரை உங்களிடம் இல்லை. ஆனால் அதுவும் ஒரு பூவென்று தெரிகிறது. காரணம், வேறு பூக்களைப் பார்த்த அனுபவங்கள் உங்களுக்கு நிறையவே இருப்பதால், இதை ஒரு பூவென்று அனுமானிக்கிறீர்கள். ரோஜாப்பூவென்றுதான் சொல்லத் தெரியவில்லை. 

முன்பு ஒரு தடவையோ, பல தடவைகளோ ஒரு பூவைக் காட்டி, இதுதான் மல்லிகைப்பூ என்று உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மல்லிகையின் வடிவம், நிறம், மணம், அழகு, மென்மை என்ற அனைத்தும் செய்திகளாக உங்கள் மூளையில் பதிந்திருக்கிறது. அதனால்தான் அந்தப் பூவைப் பார்த்ததும், உங்கள் மூளை தன்னிடம் ஏற்கனவே பதிந்திருக்கும் செய்திகளுடன் ஒப்பிட்டு, மல்லிகைப் பூவென்று உங்களுக்கு உணர்த்துகிறது. இந்தச் சாத்தியம் ரோஜாவுக்கு இருக்கவில்லை. மல்லிகையைப் போல, நீங்கள் நேரிலோ, படமாகவோ பார்த்த அனைத்துப் பூக்களையும், உங்கள் மூளை தன்னில் பதித்து வைத்திருக்கிறது.


உங்கள் முன் மல்லிகைப்பூ இருக்கின்றதோ, இல்லையோ! உங்கள் மூளையில் மல்லிகையின் உருவம் முதல் அதன் அனைத்து குணங்களும் பதிந்தபடியே இருக்கின்றன. எப்போதெல்லாம் நீங்கள் மல்லிகைப்பூவைப் பற்றிப் பேசுகிறீர்களோ, அல்லது அது பற்றிக் கேட்கிறீர்களோ, அல்லது அது பற்றிச் சிந்திக்கிறீர்களோ, அல்லது அதன் மணத்தை நுகர்கிறீர்களோ, அப்போதெல்லாம் அந்த மல்லிகைப் பூவின் உருவம் உங்கள் நினைவுக்கு வரும். அதாவது மல்லிகைப்பூ வெளியே எங்கும் இல்லை. அது உங்களுடனேயே இருக்கிறது. மல்லிகைப்பூ என்றில்லை. உலகில் நீங்கள் அறிந்து வைத்திருக்கும் எந்தப் பொருளும் வெளியே இருப்பதாகத்தான் நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் உண்மையில் அப்படியல்ல. அவையெல்லாம் உங்கள் மூளைக்குள், உங்களுடன்தான் உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. மல்லிகை என்னும் செய்தி உங்கள் மூளையில் ஏதோ ஒரு காரணத்திற்காக நிரடப்படும் போது, அதன் வடிவம் மூளையில் இருந்து மீட்டெடுக்கப்படுவது போல, நீங்கள் உலகில் பார்த்த அனைத்துப் பொருள்களும், அவை சார்ந்த அனைத்துச் சம்பவங்களும் செய்திகளாக உங்கள் மூளையில் பதிந்திருப்பதால், தேவையான சமயங்களில் அவை வெளியே கொண்டுவரப்படும். 

நமது மூளை இது போலப் பதிந்து வைத்திருக்கும் செய்திகள் எவை தெரியுமா? நீங்கள் முகர்ந்த நல்ல வாசனையோ, கெட்ட வாசனையோ, அவை அனைத்தும் மூளையில் பதிவாகி உள்ளது. நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு எத்தனையோ வாசனைகளை உங்கள் மூளை தரம் பிரித்து வித்தியாசம் காணுகிறது. அம்மா என்றோ செய்த சாம்பார் வாசம், மனைவியின் வாசம், ஆபீஸின் அருகே இருக்கும் குச்சு ஒழுங்கையின் மூத்திர வாசம் என அனைத்தும் அதில் அடங்கும். உங்களுக்கு எத்தனை விதமான வாசனைகள் தெரியும் என்று நீங்கள் யோசித்தது உண்டா? அப்படி யோசித்த்தீர்களானால் பிரமித்துப் போகும் அளவுக்கு பலதரப்பட்ட வாசனைகளை நீங்கள் அறிவீர்கள். வாசனை போல நீங்கள் கேட்ட குரல்களில் மைக்கேல் ஜாக்சன் குரல், இளையராஜாவின் குரல், அப்பாவின் குரல், கடன் கொடுத்தவன் குரல் என ஆயிரம் ஆயிரம் குரல்களை நீங்கள் உடன் கண்டு பிடிக்கும் விதத்தில் உங்கள் மூளை பதிந்து வைத்திருக்கிறது. அடுத்தது நீங்கள் பார்த்த முகங்கள். முகங்கள் என்றால் எத்தனை முகங்கள். சிறுவயதில் இருந்து பெரியவனானது வரை கண்ட அனைத்து முக்கிய முகங்களும். கந்தசாமி யார்? கமலக்கண்ணன் யார்? அஜித் யார்? அரவிந்தசாமி யார்? என்பதை உடன் சொல்லும் உங்கள் மூளை. முகங்கள் போலவே பார்த்த படங்கள், பொருட்கள், சினிமாக்கள் என எல்லாம் பதிந்து வைத்திருக்கிறது மூளை. 

நமது மூளையில், 'செரிபெல்லம்' (Cerebellum) என்று சொல்லப்படும் சிறுமூளை, 'செரிப்ரல்' (Cerebral) என்று சொல்லப்படும் பெருமூளை என இருபகுதிகள் உண்டு. இதில் சிறுமூளையானது தற்காலிக உணர்ச்சியால் தூண்டப்படும் அனைத்துச் செயல்பாட்டையும் கட்டுப்படுத்தும். நெருப்புச் சுட்டதும் கையை உதறுவது, நுளம்பு கடித்தால் அடிப்பது போன்ற செயல்களை அது கட்டுப்படுத்துகிறது. ஆனால் நமக்கு நிரந்தரமாகத் தேவையான அனைத்துச் செய்திகளையும் பதிந்து வைத்திருப்பது பெருமூளைதான். பெருமுளையின் புறப்பகுதியான செரிப்ரல் கார்டெக்ஸ் (cerebral cortex) என்னும் பகுதியில்தான் இவையெல்லாம் பதியப்படுகின்றன. பெருமூளையான செரிப்ரம், சிறுமூளை செரிபெல்லம் இரண்டையும் மிக மெல்லிய சவ்வு போன்ற பகுதி மூடியுள்ளது. இதுவே செரிப்ரல் கார்டெக்ஸ் எனப்படுகிறது. சிந்தனை, மொழி, நினைவுகள், உணர்ச்சிகள் என அனைத்தும் இந்த கார்டெக்ஸ் பகுதியில்தான் பதியப்படுகின்றன. பல மடிப்புகளுடன் இது காணப்படும். 


எப்போதும் தொழிற்பாட்டில் இருக்கும் நமது மூளை, தான் பதிந்து வைத்திருக்கும் கோடான கோடிச் செய்திகளை அமைதியான சூழ்நிலைகளில் அவ்வப்போது அது இரை மீட்கும். இரவில் நித்திரையின் போது, அது செய்யும் இந்த இரைமீட்டலைத்தான் கனவு என்கிறோம். சொல்லப் போனால் அந்த இரைமீட்டல் மூளைக்குத் தேவையானதும் கூட. கனவுகள் மூலம் மூளை தன்னைத்தானே உற்சாகப்படுத்திக் கொள்கிறது என்றும் வைத்துக் கொள்லலாம். இன்று காலை ஒரு கார் விபத்தை நீங்கள் பார்த்திருந்தால், அன்று இரவு நித்திரையின் போது, உங்களுக்கு எப்போதோ நடந்த ஒரு சைக்கிள் விபத்தை அந்தக் கார் விபத்துடன் இணைத்து கனவாக மீட்டுத் தரும். மூளை பதிந்து வைத்திருக்கும் கோடிக்கணக்கான செய்திகளில், அவை சார்ந்த சாயலுடன் ஏதோ ஒன்று நடைபெறும் போது, அந்தச் செய்தியுடன் இணைந்த அனைத்தும் நிரடப்படும். அந்த நிரடலின் போது, அவற்றை ஒழுங்கமைக்க முடியாமல், குழப்பமாக வடிவில் வெளிக்கொண்டு வந்து கனவுக் காட்சிகளாகத் தருகிறது. ஆனால் விதிவிலக்காகச் சிலருக்கு மட்டும் இரவில் காணும் கனவுக் காட்சிகள் போல, விழிப்பு நிலையில் இருக்கும் போதே அவை நிரடப்படுகின்றன. அந்த நேரங்களில் அவர்கள் விழிப்பு நிலையிலும் தமக்கு முன்னால் நடப்பது போலக் காட்சிகளைக் காண்பார்கள்.


இப்போது மீண்டும் நாம் மேலே உங்கள் நண்பன் சொன்ன பேய்க்கதைக்கு வருவோம்..............!

வெகுசில மனிதர்களுக்கு, அவர்கள் இருக்கும் சூழ்நிலை, குறிபிட்ட காலநிலை, நேரம் ஆகியவை சார்ந்து, மூளை ஒரு அமானுஷ்ய நிலையை அடைகிறது. இருட்டு, தனிமை போன்ற நேரங்களில், நாம் கேள்விப்பட்ட பேய்களின் செய்திகள், எமது முளையில் விழித்திருக்கும் ஒரு திட்டமிடப்படாத நிலையில் நிரடப்படுகிறது. அந்த நிரடலின் காரணமாக மூளை சில உருவங்களைக் காட்சிகளாகக் வெளிக்கொண்டுவருகிறது. அதாவது நாம் பார்த்த உருவங்கள், படித்த கதைகள், பார்த்த படங்கள் ஆகியவை சார்ந்து தானே உருவாக்கிய குழப்பமான ஒரு உருவத்தைக் காட்டுகிறது. சிலருக்கு அவ்வுருவம், அவருக்குத் தெரிந்த இறந்த ஒருவருடையதாகவோ, அல்லது கருமையான உருவமாகவோ தெரிகிறது. இறந்தவர்களின் உருவங்கள் தெரியும் போது, அவர்கள் இறந்த சமயத்தில் தெளிக்கப்பட்ட வாசனை திரவியங்களின் வாசனைகளும், ஊதுபத்தி வாசனைகளும் கூட சேர்ந்து வரலாம். அவர்களின் குரல்களும் கூடக் கேட்கலாம். இவை எல்லாம் தனித்தனியாகவோ அல்லது ஒன்றாகவோ உணரப்படலாம்.

இதை மனோவியல் ஹலூசினேசன் (Hallucination) என்கிறது. ஹலூசினேசன் என்பது பலவகைகளில் மனிதனுக்கு ஏற்படலாம். Visual Hallucination, Auditory Hallucination, Olfactory Hallucination என்பவை அவைகளில் சில. பலருக்கு விஷேசமாக மண்டைக்குள் குரல் கேட்கிறது என்னும் பிரச்சனை அதிகமுண்டு. காதில் ஏற்படும் குறைபாட்டின் காரணமாக நமக்கு சில இரைச்சல் ஒலிகள் கேட்பது சகஜம். கன்னத்தில் அறைந்தால் கேட்குமே ஒரு விசில் சத்தம், அது போல. வயதாகும் போது இந்தக் குறைபாடு வருவது சகஜமாக இருக்கும். ஆனால் இதுவே கொஞ்சம் அதிகமாகி, இந்த ஒலிகள் நமது மூளைக்குள் பதிந்திருக்கும் சில குரல்களின் ஞாபகத்தை தூண்டிவிடுகின்றன. அது மூளையில் இருந்து வெளிக்கொண்டுவரப்பட்டு, யாரோ காதுக்குள் எதுவோ சொல்வது போலவும், கட்டளையிடுவது போலவும் கேட்கத் தொடங்கும். சிலர் இப்படிக் குரல், தன்னைத் தற்கொலை செய்யச் சொல்லி தினமும் தூண்டியதாகச் சொல்லிக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கிய சம்பவங்களும் உலகில் உண்டு. என்னுடைய நண்பர் ஒருவருக்கு இருட்டில் மரங்களுக்குக் கீழாக போனால், மல்லிகை மணக்கும். அங்கு மல்லிகை மரம் இல்லாவிட்டாலும் கூட.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்னவென்றால், ஒரு உருவத்தைப் பார்ப்பவர்களோ, அல்லது குரலைக் கேட்பவர்களோ அப்படிப் பார்த்ததாகப் பொய் சொல்வதில்லை. அவர்கள் உண்மையாகவே உருவத்தைப் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள். அத்துடன் அவர்கள் பாரதூரமான வகையில் உள்ள அளவுக்கு மனநோயாளியாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இவையெல்லாம் ஒரு அளவுக்கு மேலே சென்றால் மனவியல் மருத்துவரை அணுகுவதே நல்லது. ஆனாலும் மனநோய் என்பதையும் தாண்டி, ஒருவருக்கு மூளையில் கட்டி (Brain Tumor), ஒற்றைத் தலைவலி (Migraine), அல்ஸ்ஹைமர் (Alzheimer) ஆகிய நோய்கள் இருக்கும் போதும் இப்படியான ஹலூசினேசன் வர வாய்ப்புகள் உண்டு என்கிறார்கள். எனவே இந்தக் காட்சிகளைக் காண்பவர்கள் எப்போதும் பொய் சொல்வதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் காண்பதும், கேட்பதும், நுகர்வதும் நிஜம். அவர்களுக்குத் தேவை நமது உதவிதான். "பேய்கள் என்பது வெளியே எங்கும் இல்லை. அது நமக்குள்ளேதான் இருக்கிறது". இது சம்மந்தமான அறிவியல் உண்மையை நாம் சரியாகப் புரிந்து கொண்டால் போதும். அப்போது பேய்கள் பற்றிய பயம் நம்மை விட்டு ஓடியே போய்விடும்.

 நன்றி உயிர்மை இதழ்

வெள்ளி, 27 மே, 2011

உங்களை நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்


உலகில் இதுவரை இருந்த கூடைப்பந்து வீரர்களில் சிறந்தவராக மைக்கேல் ஜோர்டான் கருதப் படுகிறார். ஆனால் அவர் எப்போதும் தன்னை மிக சாதாரணமாக விளையாடுவதாகவே கூறிக் கொள்வார். அவரது விளையாட்டை யாராவது புகழ்ந்தால், கடவுள் அருளால் ஏதோ சுமாராக விளையாடுவதாக தன்னடக்கத்துடன் பதிலளிப்பார்.

ஒரு முறை அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி வந்தது. பைபிள் மீது சத்தியமாக உண் மையே பேசுவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்ட பிறகு, இதுவரை இருந்த கூடைப்பந்து வீரர்களில் அவர் சிறந்தவரா என நீதிபதி கேட் டார். உடனே ‘ஆம்’ எனத் தயங்காமல் பதிலளித் தார் மைக்கேல் ! நீதிபதிக்கோ ஆச்சரியம். வழக் கத்திற்கு மாறாக இப்படிக் கூறியதற்குக் காரணம் என்னவென்று நீதிபதி பின்னர் மைக்கேலை வின வினார். பைபிள் மீது சத்தியம் வாங்கிவிட்டதால் உண்மையைக் கூறும்படி ஆகிவிட்டது என்றாராம் மைக்கேல்!

தன்மதிப்பை உணர்வது என்பது இதுதான். உங்களையே மனதுக்குள் பாராட்டிக் கொள்ளும் தன்மை இல்லா விட்டாலோ அல்லது நிபந்தனை ஏதுமின்றி உங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளா விட்டாலோ, தன்னிரக்கத்திற்கு ஆளாகிவிடு வீர்கள். இது உங்களது சிறப்பான தன்மைகள் அனைத்தையும் அழித்துவிடும்.

நாம் கண்ணாடியில் நம்மைப் பார்த்துக் கொள் ளும்போது வயதாகிவிட்டது ... முடி நரைத்துவிட் டது என்று எதிர்மறையான சிந்தனையே தோன் றுகிறது. என்றாவது நமது முகம் நன்றாகத்தானே இருக்கிறது என்று நினைத்துக் கொள்கிறோமா? குழந்தைகளிடம் தங்களை மெச்சிக் கொள்ளும் குணம் இருக்கும். வயதாக ஆக, நம்முடைய மதிப்பை நாமே குறைத்துக் கொள்ளத் தொடங்கு கிறோம். வேறு யாரும் நம்மை நிராகரிப்பதற்கு முன் நம்மை நாமே நிராகரித்து விடுகிறோம். பொதுவாக நிபந்தனைகள் ஏதுமின்றி நாம் பிறரை ஏற்பதில்லை. அவ்வளவு ஏன், நிபந்தனை கள் ஏதுமின்றி நம்மையே நாம் ஏற்பதில்லை.

உங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ள வைப்ப தற்கு வழி என்ன? உங்களிடமுள்ள சிறந்த அம் சங்களை நீங்கள் அங்கீகரிக்கத் தொடங்க வேண் டும். எந்த அம்சம் உங்களிடம் சிறப்பாக இருக்கி றதோ அதைக் கொண்டாட வேண்டும். இல்லாத அம்சங்களை நினைத்து நொந்து கொள்வதை விட்டொழிக்க வேண்டும்.

இதுவே உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக் கொள்வதற்கான வழி. தேவையில்லாத மன உளைச்சல்களை விரட்டி அடிப்பதற்கான வழி.

பேராசிரியர் கே. ராஜு
(ஆதாரம் : ‘தி இந்து’ நாளிதழில் திரு டி.டி. ஸ்ரீநாத் எழுதிய கட்டுரை)

செவ்வாய், 5 அக்டோபர், 2010

தீராத நோயெல்லாம் தீர்க்கும் இந்தப்பதிவு!

’’இந்தப்பதிவை தினமும் படித்துவர சொல்லிவர தீராதவியாதியெல்லாம் தீரும் கபம், கண்டமாலை, பித்தவெடிப்பு, கண்வலி,வயிற்றுவலி, மண்டைகொதிப்பு… இப்படி 108 வியாதிகளைக் (விளம்பரத்தின் பின்புறம் உள்ள நோய்ப்பட்டியல் பார்க்க.) குணமாக்கக்கூடியது.
எண்ணி மூன்றே மாதங்களில் படுத்த படுக்கையாக இருப்பவர் எழுந்து நட நடவென்று நடப்பார். நடந்து திரிபவர் படுக்கையில் படுப்பார்(மன்னிக்கவும் இது அச்சுப்பிழை). நடக்கமுடியாதவர் நடப்பார். பேச
முடியாதவர் பாடுவார்.
இது பதிவு என்பதால் படிப்பவர்கள் இந்தப்பதிவைப் படிக்காதவர்கள் பதினைந்துபேருக்கு மின்னஞ்சலில் அனுப்பவேண்டும்.அனுப்பாவிட்டால் நோய் மோசமடையலாம். பதிவர் பிரபல நகரங்களில் லாட்ஜுகளில் தங்கி பதிவை படித்துக்காட்டுவார். நேரம் இடம் என்பன பற்றிப்பார்க்க…”

இப்படி விளம்பரங்கள் புதிதல்ல. ஆங்கில வைத்தியர்கள் தனிப்பட்ட விளம்பரம் செய்யமுடியாது என்பது மருத்துவ நெறி.

பதிவைப்படித்துச் சொல்ல நோய் குணமாகுமா என்று கேட்டால் இந்தப் பதிவையல்ல எந்தப் பதிவை வேண்டுமானாலும் நம்பிக்கையோடு படித்தால் நோய்கள் குணமடையலாம்.

நம்பிக்கை என்று சொன்னால் அது ஒரு பொதுவான/தீவிர நம்பிக்கையாக இருக்கவேண்டும்.உலகம் முழுவதும் அந்தப்பதிவைப்பற்றிப் பேசவேண்டும். பிரபலங்கள் அந்தப்பதிவைப்படித்து எனக்கிருந்த சிக்கல் தீர்ந்ததென்று பத்திரிக்கைகளில் சொல்லவேண்டும். நீங்கள் எதையும் நம்பும் இயல்புடையவராக இருக்கவேண்டும்
படிக்கத்தொடங்கும்போது முள்ளந்தண்டில் ஒரு குறுகுறுப்பு வரும் என்று பத்திரிகையில் எழுதியிருந்தால் உங்களுக்கும் குறு குறுப்பு வரும். குணமடையக்கூடிய நோய் உங்களுக்கு இருந்தால் ஒரு முப்பது வீதம் குணமடைக்கூடும்.

இது என்ன மந்திரமோ என்று கேட்டால் மந்திரம் ஒன்றுமில்லை.
அது ப்ளசிபோ PLACEBO விளைவு என்பார்கள்.
அப்படியென்றால் திருப்தியடைவது என்று அர்த்தம். அதாவது ’’திருப்தி’’ வைத்தியம். நம்பவைத்து குணப்படுத்துவது
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மாத்திரையை பரிசோதிக்கும்போது மருந்து மாதிரியான டம்மி மத்திரைகளை அரைவாசிப்பேருக்கும் நிஜ மாத்திரையை மிகுதிப்பேருக்கும் கொடுப்பார்கள்.
அப்போது அவர்கள் அவதானித்ததுதான் இந்த ப்ளசிபோ விளைவு.
தலை வலிக்கிற முப்பது பேருக்கு டம்மி தலைவலி மாத்திரைகளை கொடுத்தால் அதில் பத்து பேருக்கு தலைவலி போய்விடும்.
வலியால் தவிக்கும் புற்றுநோயாளிகளில் கூட இதை அவதானித்திருக்கிறார்கள். டம்மி மாத்திரைகளைக்கொடுத்த்போது சிலரில் வலி குறைந்துபோனதாம்.
அவர்கள் அந்த மாத்திரைக்கு குணப்படுத்தும் சக்தியிருப்பதாக நம்புவதுதான்
இதற்கு காரணம் என்ன?
பல காரணங்களைச் சொல்கிறார்கள்.
அதில் நோய்வாய்ப்படுவதிலும் நோய்குணமடைவதிலும் மனத்திற்கு நிறையவே பங்கு இருக்கிறது என்பது முக்கியமானஒன்று.தவிர,
நோய்கள் தாமாகவே குணமடையலாம்.எளிய உதாரணம் தடிமன் போன்ற அனேகமான வைரஸ் காய்ச்சல்கள் 5-6 நாட்களில் குணமடைந்து விடுகின்றன.மருந்துகள் எவையும் தேவைப்படுவதில்லை.
ஆனால் அச்சப்படுகிற ஒரு அம்மா தன் குழந்தையை உடனேயே மருத்துவரிடம் கொண்டு போய்விடுவாள். மருத்துவர் காய்ச்சல் தணிக்கும் மருந்துப்பாணியைக் கொடுப்பார். அம்மாவுக்கும் திருப்தி டாக்டருக்கும் திருப்தி. ஆனால் நோய் தானாகவே குணமடைந்துவிடும்.
உளச்சிக்கல்கள் உடல் நோய்களாக வெளிப்படுவதுண்டு. சாதாரண தலைவலியிலிருந்து வலிப்பு மயக்கம் திடீரென பேசமுடியாது போதல் நடக்கமுடையாதுபோதல் என பலவிதமான நோய்கள் இருக்கின்றன. இவை இந்த திருப்தி வைத்தியத்தில் குணமடையக்கூடும். அல்லது ஒரு நம்பிக்கை பிரார்த்தனை போன்றவற்றில அதிசயமாய்க்குணமடைய முடியும்

போலி மருத்துவர்களும், சாமியார்களும், இன்னும்பலரும் இந்த மூன்றில் ஒரு பங்கு ‘திருப்தி’ வைத்தியப் பகுதியிலேயே வாழுகிறார்கள்.
சிலர் இப்படி திருப்தி சிகிச்சை எந்த விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை என்றும் சொல்கிறார்கள்.

நன்றி
அ.கிருஷ்ணேந்திரன்



வியாழன், 22 ஏப்ரல், 2010

மனஅழுத்தத்தை குறைக்க சில வழிகள்

வாழ்க்கையில் பிரிக்கமுடியாத ஓர் அம்சம்தான் மனஅழுத்தம். மனஅழுத் தத்தை வெற்றிகரமாகச் சந்திப்பது எப்படி என்ற ரகசியத்தைத் தெரிந்து வைத் திருப்பவர்களே நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். மனஅழுத்தத் தைக் குறைக்க சில எளிய வழிகள் இருக்கின்றன. அவை உளவியல் ரீதியானவை. காலம்காலமாக நிரூபிக்கப் பட்டு வந்திருக்கும் உண்மைகள். எதிர் காலத்தை நம்பிக்கையுடன் வரவேற்கும் எண்ணங் களை வளர்த்துக் கொள்வது, விரக்தியை அண்டவிடாமல் தடுப்பது, பகுத்தறிவுக் குப் பொருந்திவரும் சில யுக்திகளைக் கடைப்பிடித்து மனதை உற் சாக நிலை யில் வைத்திருப்பது போன்ற வழிகளே அவை.

எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் பயிற்சியளித்து நம் மீது முழுக்கட்டுப்பாட்டைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் மனஅழுத்த மேலாண்மையின் நோக்கம். நேர்மறையான மனப்பாங்கு, விடா முயற்சி, தன்னம்பிக்கை ஆகிய மூன்றும் மன அழுத்தத்தை வெற்றிகொள்வதற் கான முன்தேவைகள். அது மட்டுமின்றி ஒரு சமூக ஆதரவு தளம், பொருத்தமான நடை முறைகளைப் பயன்படுத்தி உடலையும் மனதையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளல், உடற்பயிற்சி, சரிவிகித உணவு, உறக்கம், நகைச்சுவையுணர்வு, பொழுது போக்கு விளையாட்டுகள் ஆகிய அனைத் துமே மனஅழுத்தத்திலிருந்து நம்மை விடுவிக்கும் மாமருந்துகள்தாம்.

நேர்மறை மனப்பாங்கு

“தங்களுடைய திறமைகள் மீது நேர் மறை அணுகுமுறைகள் உள்ளவர்கள் எளிதில் விரக்தியடைவதில்லை ; எதிர் காலத்தின் மீது நம்பிக்கையுடன் இருப் பார்கள் ; எதையும் விடாமுயற்சியுடன் தொடர்வார்கள். இப்படிப்பட்டவர்களால் மனஅழுத்தத்தை வெற்றிகொள்ள முடி கிறது. மாறாக, தங்களைப் பற்றிய கீழான மதிப்பீட்டினையும் எதிர்காலம் பற்றிய நம் பிக்கையற்ற எதிர்மறை அணுகுமுறை யையும் கொண்டவர்கள், அவர்களுக்குச் சாதகமான சூழ்நிலைகள் நிலவும்போது கூட, மனச்சோர்வுக்கு ஆளாகிவிடுவார் கள்” என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்ற னர். நாம் எதை நினைக்கிறோமோ அதா கவே ஆகிவிடுகிறோம் என்று உளவியல் நிபுணர்கள் கூறுவது இதைத்தான்.

சாத்தியமான இலக்குகள்

நடைமுறை சாத்தியமற்ற சில இலக் குகளை நிர்ணயித்துக் கொள்வது தோல் வியில் முடியலாம். தொலைதூர இலக்கு கள் எனில் அவற்றை அடைவது அவ் வளவு எளிதல்ல என்ற புரிதலும் இருக்க வேண்டும். பொதுவாக நமது பலம்-பல வீனங்கள், திறமைகள், நிதி வரவுகள் ஆகியவற்றைச் சரியாக மதிப்பிட்டு, பொருத்தமான இலக்குகளை நிர்ணயித் துக் கொள்வதே சாலச்சிறந்தது. வேலை களைப் படிப்படியாகச் செய்வதற்குத் திட் டமிட வேண்டும். இலக்கை முடிப்பதற் கான அனைத்து விவரங்களையும் சேக ரிக்க வேண்டும். இலக்கை முடிக்க திட்ட மிட்டதைவிடக் கூடுதலான நேரமும் நிதி யும் செலவாகலாம் என்ற கணிப்பும் இருக்க வேண்டும்.

முன்னுரிமைகளை வரிசைப்படுத்திக் கொண்டு அவற்றில் முக்கியமானவை மீது முதலில் கவனம் செலுத்துவது அவ சியம். மேலும் சில வேலைகளை ஏற்க வேண்டி வந்தால், அவற்றை முன்கூட் டியே ஏற்க மறுப்பது புத்திசாலித்தனம். சக்திக்கு மீறி ஏராளமான வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு எதையுமே முடிக்க முடியாமல் திணறுவது மனஅழுத் தத்தை அதிகரிப்பதற்கான காரணமாகி விடும். எதிர்மறை எண்ணங்கள் தாக்கும் நேரங்களில் நன்கு ஆலோசித்து செயல் திட்டத்தில் சில தேவையான மாற்றங் களைக் கொண்டுவருவது மனஅழுத்தத் தைக் குறைக்க உதவும். கடினமான சூழ் நிலையை எதிர்கொள்ளப் பயந்து அப் படிப்பட்ட சூழ்நிலை எதுவும் இல்லாதது போல் கற்பனை செய்து கொள்வது ஒரு தப்பிக்கும் முயற்சியாக இருக்குமே தவிர, பிரச்சனைக்குத் தீர்வைத் தராது. கூட வேலைசெய்பவர்கள் மீது கோபம் ஏற்பட் டால் அதை அப்படியே அமுக்கிவைப் பதை விட வெளிப்படுத்துவதே நல்லது- ஆனால் கவனமான வார்த்தைகளில். அவர்களுக்கு உங்கள் கருத்து என்ன வென்பதைத் தெரிவிக்கும் விதமாக அந்த வார்த்தைகள் அமைய வேண்டுமே தவிர அவர்களைச் சீண்டிவிடும் நோக் கில் இருக்கலாகாது. சொல்லி முடித்த பிறகு அதை விரைவில் மறந்துவிடுவதும் நீங்கள் அப்படி மறந்துவிட்டீர்கள் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்கு புலப்ப டும் விதத்தில் இருப்பதும் முக்கியம்.

சமூக ஆதரவு தளம்

நாம் அனைவருமே இந்த சமூகத்தின் அங்கங்கள். சமூக மனிதர்கள். நம்மு டைய எண்ணங்களை மனம்விட்டுப் பகிர்ந்துகொள்ளும் விதத்தில் உற்ற நண் பர்கள் சிலரையாவது தேடிக் கொள்வது பாதுகாப்பானது. மற்றவரோடு பகிர்ந்து கொள்ளும்போது மனம் லேசாகிவிடு கிறது. மனஅழுத்தத்திலிருந்து விடுபடு வதற்கு இதுவும் ஒரு மாமருந்து.

(ஆதாரம் : DREAM 2047 இதழில் டாக்டர் யதிஷ் அகர்வால் கட்டுரை)

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

பிடிக்காத துக்க செய்தியை மனிதர்கள் எதிர்கொள்ளும் ஏழு நிலைகள் - The Kübler-Ross Grief Cycle

சுவிட்சர்லாந்து நாட்டு மனநல மருத்துவரான எலிஸ்பத் கூபர்-ராஸ் (எலிசபத்து கூபரு ராசு) துக்க நிகழ்வை ஒருவர் எதிர்கொள்ளும் முறையை விளக்கியுள்ளார். முதலில் புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக இந்த நிலைகள் மருத்துவர் எலிசபத் ராசினால் கூறப்பட்டாலும், எந்த வித துக்க நிகழ்வுகளுக்கும் இது பொருந்தும் என்று சில காலங்களிலேயே கண்டறியப்பட்டது.

எலிசபத் ராஸ் முதலில் கூறியது ஐந்து நிலைகள் தான். (மறுப்பு, கோபம், பேரம், மனச்சோர்வு, ஏற்றுக்கொள்ளுதல்). சோதித்தல் என்பது பின்னர் சேர்க்கப்பட்டது. அதே போல் அதிர்ச்சி என்ற நிலையும் பின்னர் சேர்க்கப்பட்டது தான்

ஆக, ஒரு துக்க நிகழ்வை எதிர்க்கொள்ளும் மனித மனம் கீழ்க்கண்ட எழு நிலைகளை கடந்து வருகிறது
  1. அதிர்ச்சி
  2. மறுப்பு
  3. கோபம்
  4. பேரம்
  5. மனச்சோர்வு
  6. சோதித்து பார்த்தல்
  7. ஏற்றுக்கொள்ளுதல்
இதை சில உதாரணங்களுடன் பார்ப்போம்

உதாரணம் 1 : தேர்வில் தேர்ச்சியடையாத மாணவனின் மனநிலை
(பின்குறிப்பு : ஒரு 3 மணி நேரத்தில் 15 கேள்விகளுக்கு அளிக்கப்படும் விடையை வைத்து “தோல்வி” என்ற அடைமொழியை பயன்படுத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது)

தேர்வு முடிவு வரும் வரை, அவனது இயல்பான நடவடிக்கைகள் இருந்து கொண்டிருக்கும். நண்பர்களுடன் அரட்டை, கிரிக்கெட், தொலைகாட்சி, என்ற அவனது இயல்பு வாழ்க்கையை நாம் “நிலையான நிலை” என்று அழைப்போம்
(படம் உதவி : குசும்பன் )

இப்பொழுது தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்
  1. அதிர்ச்சி : முடிவை பார்த்தவுடன் அல்லது கேட்டவுடன் அவன் அதிர்ச்சி அடைகிறான். தலையை ஆட்டி சம்மதம் என்றாலும் உள்ளுக்குள் அந்த செய்தியின் தாக்கம் செல்ல சிறிது நேரம் ஆகிறது. சிலருக்கு நாக்கு உலர்ந்து விடும். தொண்டை அடைப்பது போன்ற நிகழ்வுகள் நடப்பதும் உண்டு.
  2. மறுப்பு : “இல்லை. நான் கட்டாயம் தேர்ச்சி பெற்று இருப்பேன்”. “இதில் ஏதோ தவறு”. “இந்த நாளிதழ் தவறாக அச்சிட்டுள்ளது. அடுத்த நாளிதழை வாங்கி பார்ப்போம்”
  3. கோபம் : அனைவர் மேலும் கோபம். விடைத்தாளை திருத்தியவர் மேல் கோபம். அதிகம் 10 நிமிடம் தராத தேர்வரங்க ஆசிரியர் மேல் கோபம். கத்துவது, எதையாவது தூக்கி எறிவது, அடுத்தவர்களிடம் எரிந்து விழுவது என்று சம்பந்தப்பட்ட நபர் அதிகம் “செயல்படுவதால்” இது “செயல்படும் நிலை”
  4. பேரம் : எத்தனை தாள்களில் தேர்வாக வில்லை. ஒரே ஒரு தாள் தானா, பல தாள்களா
  5. மனச்சோர்வு : அறைக்குள் அடைந்து கிடப்பது. ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பது. யாரிடமும் பேசாமல் இருப்பது என்று வழக்கமான அளவை விட குறைந்த அளவே வேலை செய்வதால் “செயல்படா நிலை”
  6. சோதித்தல் : மதிப்பெண் பட்டியலை சென்று பார்த்தல்
  7. ஏற்றுக்கொள்ளுதல் : அடுத்த தேர்விற்கு தயாராகுதல்
உதாரணம் 2 : தொழிற்சாலையில் விபத்து என்று கேள்விப்படும் தொழிலதிபர்
விபத்து என்று செய்தி வரும் வரை, அவனது இயல்பான நடவடிக்கைகள் இருந்து கொண்டிருக்கும். அலுவலகம் செல்வது, தொழிற்சாலை செல்வது, கூட்டங்கள், கேளிக்கை, கிளப்புக்கு சென்று சீட்டு விளையாடுவது என்ற அவரது இயல்பு வாழ்க்கையை நாம் “நிலையான நிலை” என்று அழைப்போம்
இப்பொழுது தொழிற்சாலையில் விபத்து என்றவுடன் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்
  1. அதிர்ச்சி : செய்தியை கேட்டவுடன் முதலில் நடப்பது அதிர்ச்சி தான். தலையை ஆட்டி சம்மதம் என்றாலும் உள்ளுக்குள் அந்த செய்தியின் தாக்கம் செல்ல சிறிது நேரம் ஆகிறது. சிலருக்கு நாக்கு உலர்ந்து விடும். தொண்டை அடைப்பது போன்ற நிகழ்வுகள் நடப்பதும் உண்டு. நெஞ்சு வலி வரலாம். முச்சடைக்கலாம். ஏற்கனவே இதய நோயாளி என்றால் மாரடைப்பு கூட வரலாம்.
  2. மறுப்பு : “இல்லை, என் தொழிற்சாலையில் இருக்காது. அங்கு விபத்து நடப்பதற்கு வழியே இல்லையே. வேறு ஏதாவது இடத்தில் இருக்கலாம்”
  3. கோபம் : கத்துவது, எதையாவது தூக்கி எறிவது, அடுத்தவர்களிடம் எரிந்து விழுவது என்று சம்பந்தப்பட்ட நபர் அதிகம் “செயல்படுவதால்” இது “செயல்படும் நிலை”
  4. பேரம் : “எவ்வளவு சேதம்”, “அதில் எவ்வளவு விபத்து காப்பீடு உள்ளது”, “கொஞ்சமாவது தேறுமா”
  5. மனச்சோர்வு : அறைக்குள் அடைந்து கிடப்பது. ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பது. யாரிடமும் பேசாமல் இருப்பது என்று வழக்கமான அளவை விட குறைந்த அளவே வேலை செய்வதால் “செயல்படா நிலை”
  6. சோதித்தல் : ”விபத்து எப்படி நடந்தது” “யார் தவறு” “இனி இப்படி நடக்காமல் தடுப்பது எப்படி”
  7. ஏற்றுக்கொள்ளுதல் : “எப்படியும் அந்த டிவிசனை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என்று நினைத்தேன்” “இனி செய்துவிட வேண்டியது தான்”
மூன்றாவது உதாரணம் எழுதவில்லை. நீங்களே பொருத்தி பாருங்கள்.
  • பொருந்தி வருவது தெளிவாக தெரிந்தால் நீங்கள் மூன்றாவது நிலையை தாண்டி நான்காவது, ஐந்தாவது, ஆறாவது அல்லது ஏழாவது நிலையில் உள்ளீர்கள்
  • கோபப்பட்டால் மூன்றாவது நிலை
  • அந்த உதாரணம் பொருந்தாது என்று கூறினால் இரண்டாவது நிலை
  • முதல் நிலையில் இருப்பவர் இந்த இடுகையை வாசிக்கும் வாய்ப்பு குறைவு

செவ்வாய், 2 செப்டம்பர், 2008

தலைவலி

உலகில் அதிகமாக மக்களை தாக்கும் நோய் தலைவலியேயாகும். ஒவ்வொரு மனிதரும், தலைவலியால் பாதிக்கப்பட்டவராகவே இருப்பர். ஒரு சிலருக்கு தலைவலி அடிக்கடி வரும், ஒரு சிலருக்கு எப்பொழுதாவது வரும். ஒரு சிலருக்கு காலையில் வரும். ஒரு சிலருக்கு மாலையில் வரும். ஒரு சிலருக்கு ஒற்றை மண்டையில் வரும். ஒரு சிலருக்கு இருபுறமும் வரும். ஒரு சிலருக்கு முன் பகுதி தலையில் வரும். ஒரு சிலருக்கு பின் மண்டையில் வரும். ஒரு சிலருக்கு தூக்கம் கெட்டால் வரும். ஒரு சிலருக்கு தூக்கத்தி-லிருந்து திடீரென விழிக்க நேர்ந்தால் வரும். ஒரு சிலருக்கு வெயிலில் இருந்தால் வரும். ஒரு சிலருக்கு பனியில் நடந்தால் வரும். ஒரு சிலருக்கு மன உளைச்சலால் வரும். ஒரு சிலருக்கு நோயின் வெளிப்பாடாக வரும். ஒரு சிலருக்கு எந்தக் காரணமும் இல்லாமலே வரும். ஒரு சிலருக்கோ எப்ப வரும்? எப்படி வரும் என்று தெரியாது. ஆனால் அடிக்கடி வரும். வந்தால் மிகுந்த தொல்லையையும் சங்கடத்தையும் உண்டாக்கும் இயல்புடைய நோய் இது. அதனால் சாதாரணமாக சங்கடம் உண்டாக்கும் நபர்களைப் பார்த்து, இந்த ஆளோடு பெரிய தலைவலியா போச்சு என்று பல நேரங்களில் பலர் சொல்லக் கேட்டிருக்-கிறோம். தலைவலியின் கல்யாண குணங்களை நோக்குவோம்.

நோய்க் காரணம்: தலைவலி கீழ்கண்ட ஏதாவது ஒரு நோயின் வெளிப்பாடாக வரலாம்.

1. இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல் (Hypoglyceamia): உண்ணும் உணவில் சர்க்கரை அளவு குறைந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். அதனால் மூளைக்கு செல்லும் இரத்தத்திலும் சர்க்கரை அளவு குறையும். இதனால் மூளையின் செயல்பாடுகள் குறையும். அப்பொழுது அதிக அளவு இரத்தம் மூளைக்கு செல்லும் நிலை ஏற்படும். அதன் காரணமாக மண்டையின் உள்புற இரத்தக் குழாய்கள் விரிவடையும். அதனால் தலைவலி உண்டாகும்.
2. அதிக இரத்த அழுத்தம் (Hypertension): இதிலும் இரத்த அழுத்தத்தை குறைக்கும் விதமாக இரத்தக் குழாய்கள் விரிவடையும். இரத்த அழுத்தம் குறைக்கும் மாத்திரைகளும் இரத்தக் குழாய்-களை விரிவடைய செய்யும். அதனால் உள்மண்டை இரத்தக் குழாய்களும் விரிந்து தலைவலி ஏற்படும்.
3. இரத்தக் குழாய் நோய்கள (Vascular Disease): நீரிழிவு நோய், மிகு இரத்த அழுத்தம் போன்றவற்றில் இரத்தக் குழாயில் உப்பு, சர்க்கரை படிவங்கள் படிவதால் இரத்தக் குழாய், சுருங்கி விரியும் தன்மையை இழக்கிறது. அதனால் தலைவலி வரலாம்.
4. மன அழுத்தம் (Mental Tension): மன அழுத்த நோயிலும் மிகு இரத்த அழுத்தம் ஏற்பட்டு அதன்பின் விளைவாக தலைவலி வரலாம்.
5. உள்மண்டை இரத்தக்கட்டு (Oedeama - Intra Cranial): தலையில் அடிபடுவதால் உள்மண்டையில் இரத்தம் கட்டி, அது மூளையின் பகுதிகளை அழுத்துவ-தால் தலைவலி வரலாம்.
6. மூளைக் கட்டிகள் (Intra Cranial Tumous): மூளையில் உண்டாகும் கட்டிகள் மூளையையும், சுற்றியுள்ள இரத்தக் குழாய்களையும் அழுத்தும் தன்மை உடைய-தால் தலைவலி உண்டாகும்.
7. கண்பார்வைக் கோளாறுகள் (Refractive Errors): பெரும்-பாலோருக்கு தலைவலி ஏற்படும் முக்கிய காரணம் பார்வை கோளாறுகளேயாகும். பார்வைக் கோளாறு உள்ளவர்கள் கண்களை அதிக அளவு பயன்படுத்தும் நிலை ஏற்படும். இது தலைவலியை அதிக அளவு உண்டாக்கும். பார்வை நரம்புகள் மய்யம், மூளையின் பின்புறம் உள்ளதால், பார்வைக் கோளாறு உள்ளவர்களுக்கும் தலைவலி பெரும்பாலும் பின் மண்டையில் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
8. முகக் காற்றறை அழற்சி (Sinusitis) : சளி ஏற்படும் பொழுது காற்றறை அழற்சி ஏற்படும். சிலருக்கு தூசுகளால் அழற்சி ஏற்படும். இதில் மிகவும் அதிகமாக மேல்தாடை காற்றறை பாதிக்கப்-படும். இதனாலும் தலைவலி உண்டாகும். இது பெரும்பாலும் நெற்றி, பக்கவாட்டில் தலை-வலியை உண்டாக்கும். காற்றறைத் தலைவலி என்றே இதை கூறுவர்.
9. பல்நோய்கள் (Dental Diseases): சரியாக முளைக்காத மூன்றாம் கடைவாய் பல் தலையின் பக்க-வாட்டில் உள்ள சதைப் பகுதிகளில் அழுத்தம் ஏற்படுத்தும். இதனால் பக்கவாட்டில் தலைவலி ஏற்படும்.
10. ஒற்றைத் தலைவலி (Migrane): மிகவும் கடுமையான வலியான இது பெரும்பாலும் மன உளைச்சல் காரணமாகவே ஏற்படும். சிலருக்கு தலைமுறை வியாதியாக வரலாம். கழுத்திலும், தலைக்குச் செல்லும் இரத்த குழாய்கள் மன அழுத்தத்தால் விரிவடையும் இதனால் வலி ஏற்படும்.

மருத்துவர்கள் தலைவலியை வேறு வகையாக வகைப்படுத்துகின்றனர்.

1. இரத்தக் குழாய் தலைவலி (Vascular Headache)

2. உள்மண்டை மிகு அழுத்தத் தலைவலி (Increased Intra Cranial Tension)

3. மூளை உறை அழற்சி, மூளை அழற்சி (Inflamation)

4. தசைச் சுருக்கம் (Muscle Spasm)

5. பிற இடங்களில் இருந்து பரவும் தலைவலி (Referred Headache)

என மருத்துவரகள் தலைவலியை பாகுபடுத்தினாலும், தலைவலி நாம் ஏற்கனவே சொன்ன 10 காரணங்களில் ஒன்றால்தான் வரும். அவை மருத்துவர்களில் பாகுபாடுகளில் உள்ளடங்கியதாக இருக்கும்.
மேற்கூறிய காரணங்களால் மண்டையின் உள்புறம் உள்ள இரத்தக் குழாய்கள் விரிவடைகின்றன. எலும்பின் கட்டித் தன்மையால் ஓரளவிற்கு மேல் விரிவடைய முடியாததால் தலைவலி ஏற்படுகிறது. ப்ளுகாய்ச்சல், மூளை அழற்சி, மூளை உறை அழற்சி ஆகியவற்றில் மண்டையின் இரத்தக் குழாய் விரிந்து தலைவலி ஏற்படுத்தும். மலைப் பகுதிகளின் உயரம், பசி, இரத்தச் சோகை, மிகு இரத்த அழுத்தம் போன்றவையும் உள் மண்டை இரத்தக் குழாயில் விரிவை உண்டாக்கி தலைவலி ஏற்படுத்தும்.

மருத்துவம்: தலைவலி பெரும்பாலும் ஒரு நேரடியான நோய் இல்லை. எனவே தலைவலி என்றாவது ஒரு நாள் வந்தால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் அதுவே ஒரு தினசரி தொல்லையாகும் பொழுது, கட்டாயம் வேறு நோய்கள் ஏதேனும் இருக்கும். பல நேரங்களில் தொடர்ச்சியான தலைவலிக்கு சோதிக்கும் பொழுது, வேறு சில நோய்கள் இருப்பது தெரியவரும். அதனால் தலைவலிதானே என்று அலட்சியப் படுத்தாமல், சரியான சோதனைகளை செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது. தலை வலிக்கும் பொழுது வலி மாத்திரைகள் சாப்பிட்டுவிட்டு, பேசாமல் இருப்பவர்களே அதிகம். இது தவறான பழக்கம். தலைவலி அடிக்கடி வந்தால் அதன் அடிப்படை மூலகாரணம் என்னவென்று ஆய்ந்து, அதற்கான மருத்துவம் செய்து கொண்டாலே தலைவலி தானே சரியாகி விடும். எடுத்துக்காட்டாக பார்வைக் கோளாறால் வரும் தலைவலி, பார்வைக் கோளாறை சரி செய்வதால் சரியாகிவிடும்.
அதேபோல் ஒற்றைத் தலைவலி சரியான மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
சரியான ஆய்வுகளும், சரியான மருத்துவமும் செய்து கொண்டால், தலைவலி நமக்கு ஒரு பெரிய தலைவலியாக மாறாமல் குணமடையும் என்பது நிச்சயம்

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2008

உளவியல் என்பது?

உளவியல் மனிதனை பற்றி அவன் சிந்தனைகள் , செயல்பாடுகள் பற்றி ஆராய்கிறது . உளவியல் (Psychology) சமூக அறிவியல்" துறைகளுள் ஒன்றாகும். உளவியற் செயற்பாடுகள், நடத்தை ஆகியவை பற்றிய அறிவியற் கல்வியான இது நடத்தை அறிவியல்களுள்ளும் அடங்குகின்றது.