புதன், 1 டிசம்பர், 2010

அமெரிக்க ராணுவத்தினர் தற்கொலை அதிகரிப்பு

பாதுகாப்புப் பணியில் இல்லாத அமெரிக்க ராணுவத் தினர் தற்கொலை செய்து கொள்வது 2010 ஆம் ஆண்டில் அதிகரித்திருக்கிறது.

எப்போதுமே போரை எதிர்நோக்கும் அமெரிக்க ராணுவத்தினர் பணிக்குச் செல்லாத காலத்தில் போதை மருந்துகளுக்கு அடிமையாகி விடுகிறார்கள். இதைத் தடுப் பதற்காக அமெரிக்க ராணுவம் எவ்வளவோ முயற்சிகளை செய்து பார்த்துவிட்டது. மன அழுத்தம், பணிக்காலத்தில் மூளையில் ஏற்பட்ட பாதிப்பு, நாட்டின் பொருளாதார நெருக்கடியால் இவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு ஆகி யவற்றால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுக் கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

தற்கொலைகளைக் குறைக்க அமெரிக்க ராணுவத்தால் ஒரு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. தற்கொலைக் கான காரணங்களை அந்தக்குழுவின் துணை அதிகாரி கிரிஸ் பில்பிரிக் பட்டியலிடுகிறார். நடப்பாண்டில் மட் டும் அக்டோபர் மாதம் வரையில் 86 ராணுவத்தினர் தற் கொலை செய்திருக்கிறார்கள். கடந்த ஆண்டில் தற் கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 48 ஆக இருந்தது. மேலும் இரு மாதங்கள் இருப்பதால் தற் கொலை எண்ணிக்கை நடப்பாண்டில் நூறைத் தொட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணியில் இருப்பவர்களுக்கு மனரீதியான பாதிப்பு களுக்கான சிகிச்சைகள் உடனுக்குடன் அளிக்கப்படு கிறது. பணியில் இல்லாதவர்களுக்கு இந்த சிகிச்சை தாம தமாக அளிக்கப்படுவதும் முக்கியமான காரணம் என்று கிரிஸ் பில்பிரிக் குறிப்பிடுகிறார்

கருத்துகள் இல்லை: