திங்கள், 17 செப்டம்பர், 2012

நாஜிசத்தின் வருகைக்கான உளவியல்


ஜெர்மன் சினிமாக்களுக்கென்று திரைப்பட வரலாற்றில் தனித்த இடம் உண்டு. அதிலும் இருபதுகளின் துவக்கத்தில் உருவான இம்ப்ரசனிச பாணிப் படங்கள் தனித்த முத்திரை பதித்தவை. தம் உருவத்திலும் சரி உள்ளடக்கத்திலும் சரி. ஜெர்மானியத் திரைப்பட உலகில் நிறையப்படங்களில் எழுத்தா ளராகவும், சில படங்களில் நடிகராகவும், ஜெர்மானிய நாடகத்துறையிலும் அனுபவம் பெற்ற ராபர்ட் வெய்ன் தன்னுடைய முதல் முழு நீளப் படமான டாக்டர் காலிகாரியின் கூடாரம்  1920 என்ற படத்தை 1919 இல் இயக்கினார், 1920 இல் வெளியானது.பிரான்சிஸ் என்கிற இளைஞன் தோட்டம் ஒன்றில் அமர்ந்திருக்கிறான். தன்னுடன் அருகில் அமர்ந்திருக்கும் மனிதனிடம் ஜேன் என்கிற பெண்ணைப் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கி றான். அவளிடம் அவன் ஒரு காலத்தில் காதல்வயப்பட்டிருந்தான்.

 அவன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறான். ஹால்ஸ்டன்வெல் நகரத்தில் ஒரு திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. டாக்டர் காலிகாரி அங்கே வருகிறார். நகர அதிகாரியிடம் தன்னிடம் இருக் கும் விசித்திர மனிதன், அதாவது எப்போதும் மயக்க நிலையில் அவரது கட்டுப்பாட்டில் இயங்குபவனான சிசாரே என்கிற தூக்கமனிதன்  பற்றிய காட்சியை நடத்த அனுமதி கேட்கிறார். அந்த அதிகாரி அவரிடம் கடுமையாக நடந்து கொள்கிறார். பிறகு அனுமதி கிடைக்கிறது. அன்று இரவில் அந்த அதிகாரி மர்மமாகக் கொல்லப் படுகிறார். திருவிழாவின் அடுத்த நாள்.

பிரான் சிஸ் தன் நண்பன் ஆலன் மற்றும் ஜேனுடன் காலிகாரியின் கூடாரத்துக்குள் நுழைகின்றான். அங்கே காலிகாரி, சிசாரேயை எழுப்புகிறார். அவனுக்கு எல்லாம் தெரியும், எந்தக் கேள்விக்கும் பதிலளிப்பான் என்கிறார். ஆர்வமுற்ற ஆலன் அவனிடம் நான் எவ்வளவு காலம் உயிரோடிருப்பேன்? என வினவுகிறான். சிசாரே, வெகு குறைந்த காலமே நீ உயிரோடிருப்பாய். இன்றே இறந்து விடுவாய் என்று பதில் கூறுகிறான். ஆலன் துணுக்குறுகிறான். பின்னர் அவர்கள் ஜேனுடன் வெளியேறுகின்றனர். அவள் விடை பெறுகிறாள். இவர்கள் இருவரும் அவள் நம்மில் யாரைக் காதலித்தாலும் நாம் தொடர்ந்து நட்பாக இருப்போம் என்று கூறிப் பிரி கின்றனர். அந்த இரவில் மர்ம உருவம் ஒன்றினால் ஆலன் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்படுகிறான். பிரான்சிஸின் சந்தேகம் டாக்டர் காலிகாரியின் மேல் விழுகிறது. 

ஆலனின் கொலையை யும் நகரத்தில் நடக்கும் தொடர் கொலை கள் பற்றியும் ஆய்வைத் தொடர்கிறான் பிரான்சிஸ். இதற்கிடையில் வேறொரு பெண் ணைக் கொல்ல முயன்றதாகக் கத்தியுடன் ஒருவன் கைதாகிறான். அந்தக் கொலை முயற்சிக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளும் அவன், மற்ற கொலைகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்கிறான். அவன் ஜெயிலில் அடைக்கப்படுகி றான். அடுத்தநாள் தன் தந்தையைத் தேடிச் செல்லும் ஜேனை காலிகாரி தன் கூடாரத்துக்குள் ஏமாற்றி அழைத்துச் செல்கிறார். அங்கே சிசாரேயால் பயமுறுத் தப்படும் ஜேன் அங்கிருந்து தப்பி ஓடி வருகிறாள். அந்த இரவில் பிரான்சிஸ், காலிகாரியின் கூடாரத்திற்குச் சென்று ஒளிந்திருந்து கவனிக்கிறான். காலிகாரி தன் பெட்டியில் படுத்திருக்கும் சிசாரேயு டன் அமர்ந்திருக்கிறார்.

 அதே நேரம் ஜேனின் அறைக்குள் கத்தியுடன் நுழையும் தூக்க மனிதன் அவளைக் கொல்லாமல் பயமுறுத்தி, மயக்கமுறும் அவளைத் தூக்கியபடி ஓடுகிறான். அக்கம் பக்கத்தினர் விழித்து அவனைத் துரத்துகின்றனர். நகரத்தின் கட்டிடங்களின் வழி ஏறிச் செல்லும் அவன், அவளை வழியில் போட்டுவிட்டு ஓடிவிடுகிறான். மேலும் அவனைத் துரத்திச் செல்கின்றனர். அவன் வழியில் விழுந்து இறக்கிறான். ஆனால் பிரான் சிஸ் நம்ப மறுக்கிறான். சிசாரே அங்கே தான் இருந்தான் என்கிறான். அவள் உறு தியாக மறுக்கிறாள். தொடர்ந்து காலிகாரி யின் கூடாரத்துக்குச் சென்று பார்க்கின்ற னர். அங்கே சிசாரே போன்ற பொம்மையே இருக்கிறது. காலிகாரியைப் பிடிக்கின்ற னர். பிரான்சிஸ் பைத்தியக்காரர் விடுதிக் குச் சென்று கேட்கிறான்.

அங்கிருக்கும் மருத்துவர்கள், தலைமை மருத்துவரைப் பார்க்கச் சொல்கின்றனர். அவரைச் சென்று பார்க்கும் பிரான்சிஸ் அதிர்ச்சியுறுகிறான். காலிகாரியே அங்கே தலைமை மருத்துவராக இருக்கிறார். அவர் உறங்கு கையில் மற்ற மருத்துவர்களுடன் சென்று அவரது அறையை ஆராய்கின்றனர். அங் கிருக்கும் நூலில் பதினொன்றாம் நூற் றாண்டில் இருந்த, டாக்டர் காலிகாரி இதே போன்று ஒரு சோம்னாம்புலிச மனித னைத் தன் கொலை நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டுள்ள விவரத் தைக் காண்கின்றனர். அதே போன்ற ஒரு சோம்னாம்புலிச மனிதன் இவரிடம் வைத்தியத்திற்குக் கொண்டு வரப் படுகி றான். காலிகாரி தான் படித்த பழம் செய்தி யைப் பரிசோதனை செய்ய விரும்புகிறார். அதே டாக்டர் காலிகாரியாகத் தம்மை வரித்துக் கொள்கிறார். இவ்வாறு கதையை விவரித்துக் கொண்டிருக்கும் பிரான்சிஸ் அமர்ந்தி ருக்கும் தோட்டமே டாக்டர் காலிகாரி யின் பைத்திய வைத்திய நிலையத்தின் பகுதியாகவே இருக்கிறது. பிரான்சிஸ் அங்கே ஒரு நோயாளியாக இருக்கிறான். அங்கே வரும் காலிகாரியின் மீது ஆவே சத்துடன் பாய்கிறான். மருத்துவமனைப் பணியாளர்கள் அவனைப் பிடித்து அடக் கிப் படுக்க வைக்கின்றனர்.

 டாக்டர் காலி காரி சொல்கிறார், அவனது வியாதி எனக்குப் புரிந்து விட்டது. அவன் என்னைப் பழங்காலத்துக் காலிகாரியாக நினைத் துக் கொண்டிருக்கின்றான்.அவனுக்கு என்ன வைத்தியம் பார்ப்பதென்று தனக் குத் தெரியும் என்கிறார்.     ராபர்ட் வெய்ன் இந்தப் படத்தின் மூலம் உலகத் திரைப்பட வரலாற்றில் ஒரு புதிய வகைப்பட்ட திரைப்படங்க ளுக்கான முன்னுரை எழுதினார். புதிய கதைக்கரு, பாத்திரங்கள், விசித்திரமான ஒளி அமைப்புக்கள், கோண வகைப்பட்ட அரங்க வடிவமைப்பு, புதிய வகைப்பட்ட நடிப்பு போன்றவற்றுடன், பயமுறுத்தல் வகைத் திரைப்படங்களுக்கான முன்மாதிரிப் படமாகவும் இது விளங்கியது. அமெரிக்க, ஐரோப்பியத் திரைப்பட உலகின் பல இயக்குநர்களி டம் செல்வாக்குச் செலுத்திய படமாகவும் இது திகழ்ந்தது.

 1930 களிலும் 1940 களி லும் திரைப்பட உலகில் பயமுறுத்திய பிரான்கன்ஸ்டைன், டிராகுலா வகைப் பட்ட படங்களுக்கும் இது முன்மாதிரி யான படமாக இருந்தது. மனிதருக்குள் இருக்கின்ற பய உள வியலின் அடிப்படையாக அமைந்த இந்தப்படம், சிறந்த மர்மப்பட வகையாகப் பலரால் பார்க்கப்பட்டாலும், இதன் அரசியல் தன்மையை, ஜெர்மனியில் 1930களில் அதிகாரத்துக்கு வந்த நாஜிக் களின் வளர்ச்சிக்கான சமூக உளவிய லோடு தொடர்புபடுத்துகிறார், சீக்ஃப்ரெட் க்ரேசர் என்கிற புகழ்பெற்ற ஜெர்மானியத் திரைப்பட விமர்சகர்.

 தனது புகழ்பெற்ற நூலான காலிகாரியிலிருந்து ஹிட்லர் வரை-ஜெர்மானிய சினிமாக்களின் உளவியல் வரலாறு நூலில் இத்த கைய படங்கள் நாஜிக்களுக்குப் பயந்து நடுங்கி அடங்கிப் போகிற உளவியலை மிக நுண்மையான முறையில் சமூக உளவியலில் உற்பத்தி செய்தன என்கிறார். முதலாம் உலகயுத்தத்தின் அழிவுக் குப் பிந்திய கொடூரமான வாழ்க்கை உள வியலிலிருந்து, இரண்டாம் உலக யுத்தக் காலம் வரையிலான காலகட்டத்தின் ஐரோப்பிய உலகின் சர்வாதிகாரத்துக்குப் பயந்து நடுங்கும் உளவியலின் பிம்பமா கவே இத்தகைய படங்கள் இருந்தன. நரம்பு வியாதிக்கு ஆட்பட்ட, மனக்குரூரம் மிக்க பிரான்கன்ஸ்டைன், டிராகுலா போன்ற காட்டேரிவகைப் படங்கள் வெய்னரின், காலிகாரி படத்திலிருந்தே தமது துவக்கப்புள்ளியைக் கண்டடை கின்றன. முதல் உலக யுத்த காலத்திற் குப் பிந்திய ஜெர்மானியத் திரைப்பட உலகில் நிலவிய பொருளாதார மந்தம், படங்களுக்கான தயாரிப்புச் செலவைக் குறைக்கச் செய்தது. அதன் விளைவாகவும், அப்போதுதான் கலை உலகில் முடிவுக்கு வந்து கொண்டிருந்த இம்ப்ரசனிச பாணியை, வெய்னர் தமது படத்துக்கான வெளிப்பாட்டு உத்தியாகத் தேர்ந்தெடுத்தார். செயற்கையான ஓவியம் போன்ற அரங்க வடிவமைப்பு, தெரு, சுவர்கள் எல்லாம், இருள் நிழலின், பல்வேறு பட்ட சாய்கோணங்களின் சேர்மான மாக கதை நிகழும் களத்தை அமைத் திருந்தார் வெய்னர். யதார்த்த உலகு சிதைவுபட்டிருந்ததாகவும் இதனைப் பொருள்கொள்ளலாம். மனித அன்பு, காதல், நட்பு எல்லாம் பயம் நிறைந்த சூழலில் சிதைந்து போன சமூகத்தில் பைத்தியக்காரர்களின் செயலாயிருக்கின்றது.

சோம்னாம்பு லிஸ்டுகள் போல, எஜமானனின் உத்தரவுக்கு அடிபணிந்து, அவர் கை காட்டுகிறவரை, அவருக்குப் பிடிக்காத வரைப் படுகொலை செய்கிற மிகப்பெரிய நாஜிப் படை அடுத்த பத்தாண்டுகளுக்குள் ஜெர்மனியில் எழுந்தது. ஹிட்லர் என்கிற டாக்டர் காலிகாரி போன்ற, வெறி கொண்ட உளவியலா ளனை அரசியல் தலைமையாகப் பெற்றது. அவரின் பைத்தியக்கார விடுதி போல, ஜெர்மானிய சமூகம் சிதைவுண்ட உளவியலில் சிக்கித் தவித்தது.படத்தின் இறுதியில் பிரான்சிஸ், ஜேன், நான் உன்னைக் காதலிக்கி றேன். எப்போது நாம் திருமணம் செய்து கொள்ளலாம்? என்று தன்னு டன் பைத்தியக்கார விடுதியில் இருக் கின்ற ஜேனிடம் கேட்கிறான். அதற்கு அவள் சொல்லும் பதில், நாம் ராஜரத்தம் உடையவர்கள், நமது இதயத்தின் கட்டளைகளைக் கேட்கக்கூடாது. நாஜிக்களின் இனத்தூய்மை வாதத் தின் குரலும் அதன் அடிப்படையிலான அவர்களின் கொடூரமான செய்கைகளும், இந்த வசனத்தில் எதிரொலிப்பது தற்செயலானதல்ல. காதல் இந்தப் படத்திலும் நொறுக்கப்படுகின்றது. காதலிப்பது பைத்தியக்காரனின் செய்கையாகச் சித்தரிக்கப்படுகின்றது. ஆனால் ராபர்ட் வெய்னரும் நாஜிக்களின் கொடூரத்திற்குப் பயந்து 1934 இல் ஜெர்மனியை விட்டு வெளி யேறி பிரான்சில் நிரந்தரமாகக் குடியே றினார் என்பது தனிக்கதை.

முனைவர்.சு.ரவிக்குமார்

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Greеtings from Carolina! I'm bored at work so I decided to browse your website on my iphone during lunch break. I love the knowledge you present here and can't wait
to take a look when I get home. I'm surprised at how quick your blog loaded on my phone .. I'm
not even using WIFI, just 3G .. Anyways, very good blog!

Also vіsit my ѕite - how to get rid of heartburn fast

பெயரில்லா சொன்னது…

Wow thаt was strange. I ϳust wrote an extremely
long comment but after I cliсκed submit my
comment dіdn't show up. Grrrr... well I'm
nоt wrіting all that over again. Αnyway,
just wanted to ѕay superb blοg!

Alѕо visit my wеb site: colonic irrigation birmingham

பெயரில்லா சொன்னது…

Нeу there! Ι've been following your web site for a while now and finally got the bravery to go ahead and give you a shout out from Houston Tx! Just wanted to mention keep up the fantastic job!

Here is my blog post; cat toilet
my page: Kitten