செவ்வாய், 17 மே, 2011

மனசாட்சியை உலுக்கும் மாணவர் தற்கொலைகள் !

தில்லியிலிருந்து வெளிவரும் தெஹெல்கா இதழ் மாணவர்கள் தற்கொலை குறித்த அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளது. சாதிப் பாகுபாடு மனோபாவம் எனும் விஷக்கிருமிகள் மாணவர் சமுதாயத்திலும் பரவி, எப்படி உயிர்க ளைஅரி த்தெடுக்கின்றன என்பதை கட்டுரை யாளர் யாமினி குறிப்பிடுகிறார். இந்த ஆய்வுகளில் தமிழ்நாட்டின் மாணவர்களும் வெளிப்படையாகவே தங்கள் நிலையை விவரித்திருக்கிறார்கள்.

சம்பவம் 1

கோபாலுக்கு வயது 20. மத்தியபிரதேசம் டிகாம்கார் கிராமத்தில் தனது பள்ளிப்படிப்பை முடித்த அவர், உள்ளூரிலேயே தோட்டக்கலை படிக்கத் துவங்கினர். அவர் ஒரு தலித் என்பது மற்ற மாணவர்களுக்கு தெரியாது. தெரியப்படுத்த அவர் விரும்பவில்லை, அதற்கு காரணமும் இருந்தது.

கோபாலின் அண்ணன் பால் முகுந்த் மிகத் திறமைசாலி. ஐஐடி நுழைவுத் தேர்வில் தேசிய அளவில் 8 வது ரேங்க் பெற்ற அவருக்கு மருத்துவர் ஆவதில் விருப்பம். தில்லியில் உள்ள ஏஐஐஎம்எஸ் கல்லூரியில் இடம் பெற்ற அவருக்கு கல்விக்கடன் உதவியாக அமைந்தது. கல்லூரிக்கு மகிழ்ச்சியுடன் சென்ற கோபாலின் அண்ணனுக்கு பாடம் அத்தனை மகிழ்ச்சியாக இல்லை. பேராசிரியர்கள் அவரை பட்டியலின மாணவர் என்று குறிப்பிட்டவண்ணம் இருந்தனர். ஒரு கட்டத்தில் அவர் தனது பெயரை வேறாக மாற்றிக் கொள்ளலாம் என முடிவெடுத்தார். இந்த அளவு மன அழுத்தம் அவரை கடைசியில் தற்கொலைக்கு தள்ளியது. 2010 ஆம் ஆண்டு அவர் தற்கொலை செய்துகொண்டு மரணமடைந்தார். இது கோபாலின் மனதில் அழியாத பிம்பமாக படிந்துவிட்டது.

சம்பவம் 2

தில்லியில் அமைந்துள்ள உயிரி மருத்துவ அறிவியல் கல்லூரியின் ஆராய்ச்சி மாணவர் லினேஷ் மோகன். மத்தியப் பிரதேசத்தின் ஏழ்மையான கிராமத்தைச் சேர்ந்தவர் அவர். சென்ற மாதம் கோபாலின் அண்ணனைப் போலவே அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் 3

தமிழ்நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள கல்லூரியில் சமூகப் பணிகள் பாடத்தில் முதுகலைப் பட்டம் படித்து வருபவர் அருண்குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரும் கோபாலைப் போலத்தான். பல நாட்களாக தனது சாதியை மறைத்தே வசித்துவந்தார். அங்கான்வாடி பணியாளரான அவரது தாயும், விவசாயத் தொழிலாளியான தந்தையும் அவருக்கு இருந்தனர். ஏழ்மையான கிராமப் பின்புல வாழ்க்கையை வெளிக்காட்டிக் கொள்ள அவர் விரும்பவில்லை.

அருண் ஒருநாள் தனது கல்லூரி விழாவில் பறை இசைத்தபோது அவரது நேர்த்தியை அனைவரும் பாராட்டினார்கள். ஒருநாள் கல்லூரியில் ஆசிரியர் வெளிப்படையாக ”உன்னை தலித் ஆராய்ச்சியாளர்கள் பேட்டிக்காக அழைத்திருக்கிறார்கள்” என்று சொன்னது அருண் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. “எனது பறையாட்டத்தை ஏற்றுக் கொண்ட இந்த சமூகம், என் சமூகத்தை துரத்தியடிக்கிறது.” என வருத்தப்படுகிறார் அருண். இனிமேலும், தனது அடையாளத்தை மறைத்து வாழ்வது சாத்தியமற்றதே.

கல்லூரி வாழ்க்கையில் கனவுகளுடன் நுழையும் தலித் மாணவர்கள் உளவியல் அடிப்படையில் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். சேலம் அருகே ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்து தற்போது ஒரு நல்ல கல்லூரியில் தனது படிப்பை துவங்கியிருக்கும் கமலின் அனுபவத்தில் இருந்து இந்த உண்மையை புரிந்துகொள்ள முடியும்.

”ஒவ்வொரு செமஸ்டர் முடிவிலும், தன்னம்பிக்கையின் அளவு குறைகிறது. எனக்கு பல கேள்விகளுக்கு பதில் தெரிந்திருந்தும், ஆங்கிலத்தில் பேச தயக்கம் இருப்பதால் நான் வாய் திறப்பதே இல்லை. சேலத்தில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால், கல்லூரியில் ஆங்கிலம் என்னை மற்ற மாணவர்களிடம் இருந்து தனிமைப்படுத்திவிட்டது.” கமலின் பல மாலை நேரங்கள், அவரது அறைக்குள் தனியாகவே கழிப்பதாக மாறிவிட்டது.

உயர் கல்வி வகுப்புகளில் இடம் கிடைத்தபோதும், தலித் மாணவர்கள் ஒரு ஒதுக்கப்பட்ட உலகத்திலேயே வாழ்கிறார்கள். அதனால் ஏற்படும் மன உளைச்சல் அவர்களின் உயிரைக் காவு வாங்கி விடுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், 18 தலித் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அவர்கள் இந்தியாவின் உயர்ந்த கல்விச் சாலைகளான ஐஐடி உட்பட 16 முக்கிய கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் பதிவு செய்யப்படாத தற்கொலைகளின் அளவு இன்னும் அதிகமாக இருக்கலாம்.

தற்கொலைகள் என்பவை ஒரு வெடிப்பு நிலையே, உளவியல் பாதிப்புகள் அந்த மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிவிடலாம். சமூகத்தின் வேரில் பீடித்துள்ள தீண்டாமை, சாதி ஆதிக்க மனோபாவத்தின் இந்த வெளிப்பாடு நம் உயிரை உலுக்கியெடுக்கிறது.

இட ஒதுக்கீட்டின் மூலம் சில சொற்ப தலித் மாணவர்களே உயர் கல்விக்கான வாய்ப்பை பெறுகிறார்கள். இந்த எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமானால், சட்டப்படியான உரிமை யை அமலாக்கிடுவது மட்டு மல்ல, இந்த சமூகத்தின் சிந்தனையில் மாற் றத்தை ஏற்படுத்திடவும் போராட வேண்டும்.

10 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

சாதிய பாகுப்பாடு தமிழகத்தில் அதிகம் என்பது உண்மை.. வாழ்த்துக்கள்

பனித்துளி சங்கர் சொன்னது…

இந்த மனித இனம் அழிந்த பிறகும் இது நீளுமோ பயமாகத்தான் இருக்கிறது

விடுதலை சொன்னது…

மதுரை சரவணன்
தங்கள் கருத்துக்கும்
வருகைக்கும் நன்றி

விடுதலை சொன்னது…

பனித்துளி சங்கர்

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

Word verification -ஐ நீக்கிவிட்டேன்

பெயரில்லா சொன்னது…

Do yоu mind if I quote a few οf your ρosts as long as I рrovide credit and sοurсes bacκ to уour blog?
Mу blog site is in the ѵery same аrea of interest as yοurs and my visitoгs woulԁ dеfіnitеlу benefit from
ѕome of the informаtion you present hеre.
Pleaѕe let me know іf thіs okay with уou.
Τhanκs a lot!
Also see my site :: herpes treatments natural

பெயரில்லா சொன்னது…

Hi therе! Quick quеstiοn that's completely off topic. Do you know how to make your site mobile friendly? My website looks weird when browsing from my iphone 4. I'm tryіng to
finԁ a template or plugin that might be able to fix this problem.

If уоu havе аny recommendаtions,
pleaѕe sharе. Thаnk уou!


Also visit my weblоg :: http://www.Cinsel-merak.com/blogs/entry/Six-Most-Well-known-Forms-Of-Massage
my website: poetaslocos.com

பெயரில்லா சொன்னது…

It's a shame you don't have a ԁonate button!
I'd most certainly donate to this fantastic blog! I suppose for now i'll settlе for boοkmaгking
and adding your RSS feеd to my Google account.
I look forward to fresh upԁates аnd ωill talk about this ѕite
ωith my Facebоοk group. Chаt soon!

Feel frеe tο surf to my page Simple wood projects

பெயரில்லா சொன்னது…

My partner and І absolutеly loѵe youг blog anԁ find nеarly аll of уour post's to be just what I'm lоoking foг.
can уou offer gueѕt writers to ωrite
content in your case? I wouldn't mind writing a post or elaborating on a few of the subjects you write with regards to here. Again, awesome web site!

Feel free to surf to my homepage - http://strongwebserver.nl/pomocholandia/link/119

பெயரில்லா சொன்னது…

Hi there! This is κіnd of off topic but I need sоme help fгom an eѕtablishеd blog.
Ιѕ it hard to set up your oωn blog?
I'm not very techincal but I can figure things out pretty fast. I'm thinκіng аbout setting up my own but I'm not sure where to begin. Do you have any tips or suggestions? Many thanks

My site fathers day gift ideas

பெயரில்லா சொன்னது…

Wοah! ӏ'm really digging the template/theme of this site. It's simple, yеt еffеctiѵe.
A lot of times it's tough to get that "perfect balance" between usability and visual appeal. I must say you've done a amаzing јob with this.
In adԁition, the blog loaԁs veгy fast
for mе on Оpeгa. Εxcellent Blog!

Feеl free to vіsit my site; natural breast enhancement