வியாழன், 26 ஆகஸ்ட், 2010

அதிகரிக்கும் தற்கொலை... அதிர்ச்சியூட்டும் பின்னணி!

“ஜூலை இரண்டாவது வாரத்தில் கவிதா (திருப்பூர் நகர் அருகிலுள்ள பள்ளிப்பாளையம்) என்ற 35 வயதுப் பெண்மணி தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் கிணற் றிலே தள்ளிவிட்டு பிறகு தானும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். குடும்பக்கட னை அடைக்க நிலத்தை விற்க, தனது கணவன் முயற்சித்ததைக் கண்டு மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தைப் பாது காக்க நடத்திய போராட்டத் தில் தோல்வியுற்ற பிறகே இத்த கைய சோகமான முடிவுக்கு வந்தார்”

டெக்கான் கிரானிக்கல் (23-07-2010)

இது ஒரு சம்பவம் மட்டுமல்ல, 2010 ஜனவரி முதல் ஜூன் வரையில் திருப்பூர் நகரிலும், அருகிலுள்ள பகுதிகளிலும் சுமார் 350 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைக்கு பிர தானமான காரணம், கந்துவட்டிக் கொடு மை மற்றும், வறுமைதான் என பத்திரி கைகளின் ஆய்வுகள் கூறுகின்றன.

ஆண்டுக்கு 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் டாலர் கொழிக்கும் நகரத்தில் தான் மேற்கண்ட சோகம் நிகழ்ந்துள்ளது. இது திருப்பூர் நகரத்தில் உள்ள நிலைமை மட்டுமல்ல. இதைப் போலவே, சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்திலுள்ள செம்மாண்ட பட்டி கிராமத்தில் நெசவுத்தொழிலாளர் குடும்பத்தைச் சார்ந்த 5 பேர் வேலை யில்லாததால் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற செய்தி பத்திரிகையில் வெளியானது. வயதான தந்தை, தாய் மற்றும் மருமகள், எட்டுவயது பேரன், 2 வயது பேத்தி ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட சோக நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன்பு நடந்துள்ளது. மாநிலம் முழுவதும் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள் இத்தகைய அவல நிலைமையில்தான் வாழ்ந்து வருகிறார்கள்.

இத்தகைய நிலைமை திடீரென்று ஒரு நாளில் உருவாகிவிட வில்லை. கடந்த 20 ஆண்டு காலமாக அகில இந் திய அளவில் மத்திய அரசு கடைப் பிடித்து வரும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைதான் மக்களை தற்கொலை யை நோக்கி தள்ளுகிறது. குறிப்பாக 2009ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ் தலைமையி லான திமுக இடம் பெற்றுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட் டணி அரசு கடைப் பிடித்துவரும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கை ஏழை, எளிய உழைக்கும் மக்களை வாழ்க் கையின் விளிம்புக்கே விரட்டி விடுகிறது.

தாராளமயப் பொருளாதார கொள்கை யினால் இந்திய பொருளாதாரம் கடந்த ஆண்டு 7.4 சதவிகிதம் வளர்ந்துள்ளதாக மத்திய அரசு தம்பட்டம் அடிக்கிறது. இந்த வளர்ச்சி யாருக்குப் பலன் அளித்துள்ளது என்பதுதான் பிரச்சனை. 2004ஆம் ஆண்டு ரூபாய் 4,600கோடியும், அதற்கும் கூடுதலாக சொத்துள்ளவர்களின் எண் ணிக்கை 9. ஆனால் இத்தகைய பெரு முதலாளிகளின் எண்ணிக்கை 2010இல் 49 ஆக உயர்ந்துள்ளது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதும், ஏழைகள் மேலும் ஏழைகளாவதும் மத்திய-மாநில அரசுகள் கடைப்பிடித்து வரும் தாராள மயப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவே ஆகும்.

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 45 கோடிப்பேர் கருத் தாலும், கரத்தாலும் உழைத்து வாழ்பவர் கள். இதில் விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட முறைசாராத் தொழிலாளர்கள் 39 கோடிப்பேர். இவர்கள்தான் நகர்ப்புற, கிராமப்புற ஏழை உழைக்கும் மக்கள். இதில் தலித், பழங்குடி மற்றும் சிறு பான்மை பகுதியைச் சார்ந்த முறைசாரா தொழிலாளர் குடும்பங்கள் சமூகக் கொடு மைகளுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.

மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற ஐக் கிய முற்போக்குக் கூட்டணி அரசு -2 தனது முதல் பட்ஜெட்டில் மக்கள் மீது ரூ.60,000கோடி அளவுக்கு பாரத்தை சுமத் தியது. அதே நேரத்தில், முதலாளிகளுக்கு ரூ.26,000 கோடிக்கு சலுகை அளித்தது. மூன்றே மாதங்களில் இரண்டாவது முறையாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியது. மத்திய அரசி னுடைய இத்தகைய மக்கள் விரோதக் கொள்கையை எதிர்த்து கடந்த ஏப்ரல் 27 அன்றும், ஜூலை 5 அன்றும் தமிழகம் உட்பட நாடு தழுவிய கடையடைப்புப் போராட்டம் நடத்தினோம். அரசின் கொள்கையில் மாற்றம் ஏற்படாததால், தற்பொழுது ஆகஸ்ட் 22 முதல் 29 வரை மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வருகிறது.


-ஜி.ராமகிருஷ்ணன் மாநிலச் செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)